Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 358)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
ஸ்வதோஷத்துக்கும் பகவத் பாகவத குணங்களுக்குமே காலம் போருகையாலே.
அதெத்தாலேயென்ன அருளிச்செய்கிறார் (ஸ்வதோஷத்துக்கும்) என்று தொடங்கி.
அது எப்படி என்று கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “நீசனேன் நிறைவொன்றுமிலேன்”, “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பு, மிந்நின்ற நீர்மை”, “அமர்யாத: க்ஷுத்ர:”, “வித்வேஷமாநமதராக விலோப மோஹாத்யாஜாநபூமி:”, “அதிக்ராமந் நாஜ்ஞாம் தவவிதி நிஷேதேஷுபவதேப்யபித்ருஹ்யந் வாக்தீக்ருதிபிரபி பக்தாய ஸததம், அஜாநந் ஜாநந்வா பவத ஸஹநீயாகஸி ரத:”, “ஸ்ரீரங்கேச த்வத் குணாநாமிவாஸ்மத்தோஷாணாம் க: பாரத்ருச்வா யதோஹம்” இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே, அநவதிகமான தன்னுடைய தோஷாநுஸந்தாநத்துக்கு, அந்த தோஷத்தைப் பாராம லங்கீகரித்தருளின பகவானுடையவும்; “வேதம் வல்லார்களைக் கொண்டு” என்றும், “போதயந்த: பரஸ்பரம்” என்றும், “அவனடியார் சிறுமாமனிசரா யென்னை யாண்டா ரிங்கே திரிய, நறுமாவிரை நாண்மலரடிக் கீழ்ப்புகுதல், உறுமோ” என்றுஞ் சொல்லுகிறபடியே, புருஷகாரமும் உசாத் துணையும் ப்ராப்யருமான பாகவதர்களுடையவும்; “ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:”, “அஸங்க்யேய கல்யாணகுணகணெளக மஹார்ணவ”, “யதா ரத்நாநி ஜலதே ரஸங்க்யேயாநி புத்ரக, ததா குணாஹ்யநந்தஸ்ய அஸங்க்யேயா மஹாத்மந:” என்றும், “நாஹம் ஸமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வந்தும் குணாந் பத்மபுவோப் யகம்யாந்” என்றுஞ் சொல்லுகிறபடியே அஸங்கயேயமாயிருந்துள்ள குணாநு ஸந்தாநங்களுக்குமே காலம் போந்து மற்றொன்றுக் கவகாசமில்லாமையாலே யென்கை. (இவற்றுக்கே காலம் போருகையாலே) என்கையாலே, ஸ்வகுண ஸ்மரணத்துக்கு அவகாசமில்லை யென்னுமிடமும் அர்த்தாத்ஸித்தமிறே.
கீழே உள்ள பல வரிகளிலும் கூறப்பட்டபடி தனது தோஷங்களை இவன் எப்போது எண்ணியபடி உள்ளான். திருவாய்மொழி (3-3-4) – நீசனேன் நிறைவொன்றுமிலேன் திருவிருத்தம் (1) - பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பு, மிந்நின்ற நீர்மை ஸ்தோத்ரரத்னம் (62) - அமர்யாத: க்ஷுத்ர: - வேதங்களில் கூறப்பட்ட விஷயங்களில் மரியாதை தவிர்த்தவனாக ஸ்ரீவரதராஜஸ்தவம் (76) – வித்வேஷமாநமதராக விலோப மோஹாத்யாஜாநபூமி: – காரணம் இன்றி ஒருவன் மீது விரோதம் கொள்ளுதல், குலம் போன்றவற்றால் கர்வம், உலக விஷயங்களில் ஆசை, கோபம். ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-91) - அதிக்ராமந் நாஜ்ஞாம் தவவிதி நிஷேதேஷுபவதேப்யபித்ருஹ்யந் வாக்தீக்ருதிபிரபி பக்தாய ஸததம், அஜாநந் ஜாநந்வா பவத ஸஹநீயாகஸி ரத: - திருவரங்கனே! உன்னால் விதிக்கப்பட்டவை மற்றும் விலக்கப்பட்டவை என்பதை மீறி நடப்பவனாக, உனக்கும் உனது அடியார்களுக்கும் எப்போதும் பல அபசாரங்கள் செய்பவனாக, உன்னால் பொறுக்க இயலாத பல குற்றங்கள் உள்ளவனாக. ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-94) - ஸ்ரீரங்கேச த்வத் குணாநாமிவாஸ்மத் தோஷாணாம் க: பாரத்ருச்வா யதோஹம் – ஸ்ரீரங்கநாதா! உனது குணங்கள் போன்று எங்களுடைய குற்றங்களுக்கு எல்லை காண யாரால் இயலும் மேலும் கீழே உள்ள வரிகளின்படி பகவானை அண்டுவதற்கு உதவுபவர்களாக உள்ளவர்களும், தனக்கு மிகவும் நன்மையைச் செய்பவர்களும் ஆகிய பாகவதர்களின் குணங்களை எப்போதும் எண்ணியபடியே உள்ளான். திருவாய்மொழி ( 4-6-8) - வேதம் வல்லார்களைக் கொண்டு ஸ்ரீமத்பகவத்கீதை (10-9) - போதயந்த: பரஸ்பரம் - என்னிடம் மனம் வைத்து ஒருவருக்கொருவர் அறிந்தவர்களாக திருவாய்மொழி (8-10-3) - அவனடியார் சிறுமாமனிசரா யென்னை யாண்டா ரிங்கே திரிய, நறுமாவிரை நாண்மலரடிக் கீழ்ப்புகுதல், உறுமோ மேலும் கீழே உள்ள வரிகளின்படி தனது குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளும் பகவானுடைய எல்லையற்ற குணங்களை எப்போதும் எண்ணியபடியே உள்ளான். ஸ்தோத்ரரத்னம் (18) – ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி: - அனைத்து திருக்கல்யாண குணங்களின் ஸமுத்ரமாக நீ உள்ளாய். சரணாகதி கத்யம் – அஸங்க்யேய கல்யாணகுணகணெளக மஹார்ணவ - எண்ணற்ற கல்யாண குணங்களின் மிகப் பெரிய ஸமுத்ரமாக உள்ளாய் யதா ரத்நாநி ஜலதே ரஸங்க்யேயாநி புத்ரக, ததா குணாஹ்யநந்தஸ்ய அஸங்க்யேயா மஹாத்மந: - கடலில் உள்ள இரத்தினங்களை எவ்விதம் எண்ண இயலாதோ அது போன்று ஸர்வேச்வரனின் குணங்களையும் எண்ணமுடியாது நாஹம் ஸமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வந்தும் குணாந் பத்மபுவோப் யகம்யாந் – நான்முகனாலும் அறிய இயலாத பெருமைகள் கொண்ட ஸர்வேச்வரனுடைய பக்தர்கள் குறித்து என்னால் முழுவதுமாக உரைக்க இயலாது. ஆக மேலே உள்ளவற்றைச் சிந்திப்பதற்கே காலம் சரியாக உள்ளதால், மற்றவற்றைக் குறித்து சிந்திக்க நேரம் இல்லை என்று கருத்து. எனவே தனது குணங்கள் குறித்துச் சிந்திக்கவும் நேரம் இல்லை.