Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 357)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
இதுதனக்கு அவஸரமில்லை.
இதுதானெல்லாம் சொல்ல வேண்டுவது இதுதனக்கு அவகாசமிவனுக்கு உண்டாலிறே யென்கிறார் மேல் (இதுதனக்கவஸரமில்லை) என்று.
இவை அனைத்தும் உரைக்க வேண்டுவது, இதற்கான அவசியம் இவனிடம் உண்டானால் மட்டுமே ஆகும் என்கிறார்.
– அதாவது, பகவத் பாகவத தோஷ சிந்தநமாகிறவிது தனக்கு அவஸரந்தானிவனுக்கு முதலிலே யில்லையென்கை.
பகவானிடம், பாகவதர்களிடமும் குற்றத்தைக் காணுதல் என்பது முதற்கண் அவனிடம் இல்லை என்று கருத்து (அதாவது அவற்றை எண்ண இவனுக்கு நேரம் இல்லை).