Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 356)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
நடந்ததில்லையாகில் தோஷ ஜ்ஞாநமே தோஷமாம்.
நடந்ததில்லையாகில் வரும் தோஷமென்னென்ன அருளிச்செய்கிறார் (நடந்ததில்லையாகில்) என்று தொடங்கி.
அவர்களுடைய குணத்தைப் பற்றிய சிந்தனை உண்டாகவில்லை என்றால் ஏற்படும் தோஷம் என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, குணப்ரதிபத்தி நடவாதொழிந்தால் தோஷ ப்ரதிபத்தியிறே நடப்பது, அந்த தோஷ ஜ்ஞாநந்தானே இவனுக்கு பகவந் நிக்ரஹ ஹேதுவான தோஷமாம்; இதடியாக வேறொரு தோஷமுண்டாமென்ன வேண்டாவென்கை. இத்தால், இது அவச்யம் பரிஹரணீய மென்னுமிடம் சொல்லிற்றாய்த்து.
– “குணம் உண்டு” என்ற சிந்தனை ஏற்படவில்லையென்றால், “குற்றம் உண்டு” என்ற சிந்தனையே மேலோங்கி நிற்கும். இப்படியாகக் குற்றத்தைக் காண்பது என்ற குற்றமே, ஸர்வேச்வரன் கொள்ளும் கோபத்திற்குக் காரணமாக உள்ளது. ஆகவே தனியாக வேறு எந்தவொரு குற்றமும் உண்டாக வேண்டியதில்லை என்று கருத்து. எனவே இந்தக் குற்றம் அவசியம் நீக்கப்பட வேண்டியதாக உள்ளது.