Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 355)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

ஸ்வதோஷமில்லையாகில் குணப்ரதிபத்தி நடக்கும்.

ஸ்வதோஷத்தாலே என்னலாவது தோஷந்தானுண்டானாலன்றோ வென்ன அருளிச்செய்கிறார் (தோஷமில்லையாகில்) என்று தொடங்கி.

“ஸ்வதோஷம்” என்று கூறுவதன் மூலம் அத்தகைய குற்றம் தனக்கு இருந்தால் அல்லவோ பொருந்தும் என்று கேட்கலாம். இதற்கான விடையை அருளிச்செய்கிறார்.

– அதாவது, சந்த்ர த்வித்வ தர்சநஹேதுவான சக்ஷுர்தோஷமில்லாதபோது சந்த்ரைகத்வமே தோற்றுமாப்போலே, தோஷதர்சந ஹேதுவான ஸ்வசித்த தோஷமில்லாதபோது பகவத் பாகவத விஷயங்களில் குணப்ரதிபத்தியே நடக்குமென்கை. அது நடவாமையால் தோஷமுண்டென்று கொள்ளவேணுமென்று கருத்து.

– சந்த்ரன் இரண்டு என்று தோன்றுவதற்குக் காரணமான கண் நோய் இல்லாதபோது, சந்த்ரன் ஒருவனாக மட்டுமே தோன்றுவது போன்று, குற்றத்தைக் காண வைப்பதான தனது மனக்குற்றம் இல்லாதபோது, பகவானிடமும் பாகவதர்களிடமும் குணங்களை மட்டுமே காண்பர். இப்படிக் குணத்தைக் காணாமையால், தன்னிடம் தோஷம் உண்டு என்றாகிறது.