Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 354)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

ஸ்வதோஷத்தாலும் பந்தத்தாலும்.

அதுக்குத்தர மருளிச்செய்கிறார் (ஸ்வதோஷத்தாலும்) இத்யாதியாலே.

– அதற்கான விடையை அருளிச்செய்கிறார்.

– அதாவது, காசாதிதுஷ்ட த்ருஷ்டிமானுக்கு, சந்த்ர த்வித்வாதிகள் தோற்றுமாப்போலே, நிர்தோஷமான விஷயங்களிலே தோஷம் தோன்றும்படியான துர்வாஸநா துஷ்ட சித்ததையாகிற ஸ்வதோஷத்தாலும், பித்ராதிகள் தோஷம் புத்ராதி களதாமாப்போலே அவர்களுக்குண்டான தோஷம் தன்னதாம்படி அவர்களோடு தனக்குண்டான பந்த விசேஷத்தாலு மென்கை. (ஸ்வதோஷத்தாலும்) என்கிறவிது, அத்தலையில் தோஷாபாவத்தைப் பற்றச் சொல்லுகிறது; மற்றையது, தோஷவத்தையை அங்கீகரித்துக்கொண்டு சொல்லுகிறது.

– கண் நோயால் பாதிப்படைந்த ஒருவனுக்குச் சந்த்ரன் இரண்டு உள்ளதாகத் தோன்றும். இது போன்று குற்றம் இல்லாதவகள் விஷயத்தில் குற்றத்தைக் காண்பது என்பது தீய பழக்கம் காரணமாகக் கெடுக்கப்பட்ட மனத்தை உடைய தனது குற்றத்தாலே ஏற்படுகிறது. மேலும் மாதாபிதாக்களின் குற்றம் பிள்ளைகள் மீது வருவது போன்று, அவர்களுக்கு உண்டான தோஷம் (அவர்கள் மீது கற்பிக்கப்பட்ட குற்றம்) என்பது தன்னுடையது என்று அவர்களுடன் ஏற்பட்ட பந்தம் காரணமாகவும் கொள்ளலாம். “ஸ்வதோஷத்தாலும்” என்பதன் மூலம் மற்றவர்களிடம் தோஷம் இல்லை எனப்பட்டது; “பந்தத்தாலும்” என்பதன் மூலம் அவர்களிடம் குற்றம் இருப்பதாக ஒப்புக்கொண்டு உரைப்பதைக் காட்டுகிறார்.