Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 353)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

ஸ்வதோஷமானபடி யென்னென்னில்.

அது ஸ்வதோஷமானபடியை ஸாதிக்கைக்காக தத்விஷய ப்ரச்நத்தை அநுவதிக்கிறார் (ஸ்வதோஷமானபடி யென்னென்னில்) என்று.

அது அவ்விதம் எண்ணுபவர்களிடம் உள்ள குற்றமே என்பதை விளக்கும் விதமாக, அது குறித்த கேள்வியை எழுப்பிக்கொள்கிறார்.

பரகதமாய்த் தோற்றுகிறவது ஸ்வதோஷமானபடி யெங்ஙனே யென்னி லென்றபடி.

மற்றவர்களிடம் காண்கின்ற குற்றம் என்பது எவ்விதம் தன்னிடம் காணப்படும் குற்றமாகும் என்று கருத்து.