Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 346)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

ஆசார்ய ப்ரீத்யர்த்தமாக இவனுக்குத் தவிரவேண்டுவது பகவத் த்ரவ்யத்தை யபஹரிக்கையும் பகவத் போஜநத்தை விலக்குகையும் குரு மத்த்ர தேவதா பரிபவமும்.

ஆசார்யனுக்குகப்பாக இவன் பண்ணும் கைங்கர்யந்தான் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமாக இருக்கையாலே, ப்ரவ்ருத்தி ரூபமானவற்றை அருளிச்செய்த அநந்தரம் நிவ்ருத்தி ரூபமானவற்றை யருளிச்செய்கிறார் மேல் (ஆசார்ய ப்ரீத்யர்த்தமாக இவனுக்குத் தவிர வேண்டுவது) என்று தொடங்கி.

ஆசார்யனின் மகிழ்ச்சிக்காக சிஷ்யன் செய்யும் கைங்கர்யங்கள் என்பவை செய்யப்படவேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என்று இருவகைப்பட்டு உள்ளது; ஆகவே செய்யவேண்டியதைக் குறித்து இதுவரை அருளிச்செய்த பின்னர், செய்யக் கூடாதது குறித்து அருளிச்செய்யத் தொடங்குகிறார்.

(பகவத் த்ரவ்யத்தை) இத்யாதியாலே, அவை தன்னை உத்தேசிக்கிறார்.

– “பகவத் த்ரவ்யத்தை” என்பது தொடக்கமாக இதனை அருளிச்செய்கிறார்.