Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 345)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
அதாவது ஜ்ஞாந வ்யவஸாய ப்ரேம ஸமாசாரங்கள்.
அதேதென்ன வருளிச்செய்தார் (அதாவது) என்று தொடங்கி.
கடந்த சூத்திரத்தில் கூறியதை மேலும் விளக்குகிறார்.
(ஜ்ஞாந வ்யவஸாய ப்ரேம ஸமாசாரங்களாவன) ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமும், ததநுரூபங்களான உபாய வ்யவஸாயமும், உபேய ப்ரேமமும், இவை மூன்றுக்கு மநுரூபமான ஸம்யகநுஷ்டாநமும் இத்தால், திருமந்த்ரத்தில் பதத்ரயத்தாலும் ப்ரதிபாதிக்கப்படுகிற ஸ்வரூபோபாய புருஷார்த்தங்களில் ஜ்ஞாந வ்யவஸாய ப்ரேமங்களையும் ததநுரூபாநுஷ்டாநங்களையுஞ் சொல்லுகிறது.
– “வ்யவஸாய ப்ரேம ஸமாசாரங்களாவன” என்பது தனது ஸ்வரூப ஞானத்தைப் பெறுதல், அதற்கு ஏற்றபடியான உபாயம் ஸர்வேச்வரனே என்ற உறுதி, உபேயமாக உள்ள கைங்கர்யத்தில் ப்ரேமை என்பதாகும். இவை மூன்றுக்கும் தேவையான நல்ல ஒழுக்கமும் இதில் அடங்கும். இதன் மூலம் திருமந்த்ரத்தின் ஓம், நமோ, நாராயணாய என்ற மூன்றைப் பற்றிய அறிவு, உறுதி மற்றும் ஆர்வம் ஆகியவை எற்படுவதால் அவற்றை அவற்றின் ஒழுக்கத்துடன் உரைப்பதாகிறது.