Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 344)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
ஆசார்யன் நினைவாலேயுண்டு.
அதுக்குத்தர மருளிச்செய்கிறார் (ஆசார்யன் நினைவாலேயுண்டு) என்று.
– கடந்த சூர்ணையில் எழுப்பப்பட்ட கேள்விக்கான விடையை அருளிச் செய்கிறார்.
– அதாவது, ஸ்வரூபஜ்ஞனான சிஷ்யன் நினைவா லொருக்காலு மொன்று மில்லை; ஸ்வக்ருஷிபல ஸந்துஷ்டனான ஆசார்யன் நினைவாலே யுண்டென்கை.
தனது ஸ்வரூபத்தைப் பற்றிய ஞானம் உள்ள சிஷ்யனின் நினைவால் ஆசார்யனுக்குச் செய்யக்கூடியது ஏதும் இல்லை; ஆனால் தனது உபதேசம் மூலம் சிஷ்யனுக்கு ஏற்பட்ட ஞானம் போன்றவற்றைக் கண்டு ஆசார்யன் மகிழ்தல் என்பது உண்டு.