Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 343)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்குப் பண்ணுமுபகாரம் ஒன்றுமில்லையோ வென்னில்.

– இனி, சிஷ்யனாசார்யனுக்குப் பண்ணு முபகார மின்னதென் றருளிச் செய்வதாக, தத்விஷய ப்ரச்நத்தை யநுவதிக்கிறார் (ஆனால் சிஷ்ய னாசார்யனுக்குப் பண்ணு முபகார மொன்றுமில்லையோ வென்னில்) என்று.

அடுத்து சிஷ்யன் ஆசார்யனுக்குச் செய்யும் உபகாரம் “இன்னது” என்று அருளிச்செய்யும் பொருட்டு, அது குறித்த கேள்வியை அருளிச்செய்கிறார்.

– அதாவது, இப்படி கொள்கொடைகளுக்கு யோக்யதை இல்லையாகிலும், உபகார ஸ்ம்ருதியுடைய சிஷ்யன் மஹோபகாரகனான ஆசார்யனுக்குப் பண்ணுமுபகார மொன்று மில்லை யோவென்னி லென்கை.

சிஷ்யன் அளிப்பதற்கும், ஆசார்யன் ஏற்பதற்கும் தகுதி இல்லை என்றபோதிலும், செய்ந்நன்றி அறிதல் என்ற நிலை உள்ள சிஷ்யன் தனக்கு மிகப் பெரிய உபகாரம் செய்கின்ற ஆசார்யனுக்குச் செய்வதற்கான உபகாரம் ஏதும் இல்லையோ என்று கேட்கலாம்.