Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 331)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

சிஷ்யனுக்கு நிக்ரஹ காரணம் த்யாஜ்யம்

நிக்ரஹ முபாதேயமாகில் நிக்ரஹ காரணமு முபாதேயமாகாதோ வென்ன? (சிஷ்யனுக்கு நிக்ரஹ காரணம் த்யாஜ்யம்) என்கிறார்.

– கோபம் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றால், அந்தக் கோபத்துக்குக் காரணமாக உள்ள குற்றங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கன என்று ஆகாதோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, நிக்ரஹ முபாதேயமென்று நினைத்து மீளவும் தத்காரணத்தைச் செய்யவொண்ணாத, யாதொரு காரணத்தாலே நீரிலே நெருப்பெழுமாப்போலே தன் விஷயத்தில் குளிர்ந்து தெளிந்திருக்கிற வாசார்ய ஹ்ருதயத்திலே நிக்ரஹமெழுந்திருந்தது, அந்தக் காரணத்தை மறுவலிடாதபடி விடவேணுமென்கை.

– கோபம் கைக்கொள்ளத்தக்கது என்று சிந்தித்து, அந்தக் கோபத்திற்குக் காரணமான குற்றத்தை மீண்டும் செய்யலாகாது. நீரில் நெருப்பு எழுவது போன்று, சிஷ்யனாகிய தன் விஷயத்தில் குளிர்ந்து நிற்கும் ஆசார்யனின் திருவுள்ளத்தில் எந்த ஒரு காரணத்தால் கோபம் எழுந்ததோ அது மீண்டும் வராமல் காக்கவேண்டும் என்று கருத்து.