Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 324)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

இதுக்கடி உபகார ஸ்ம்ருதி.

இப்படி யெல்லாமிவனே யென்றநுஸந்திக்கைக்கடியேதென்ன அருளிச் செய்கிறார் (இதுக்கடி உபகாரஸ்ம்ருதி) என்று.

– இப்படியாக “அனைத்தும் ஆசார்யனே ஆவான்” என்று எண்ணுவதற்குக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, இப்படி ஆசார்யனே நமக்கு ஸகலமும் என்றநுஸந்திக்கைக்கு ஹேது, நித்யஸம்ஸாரியாய்க் கிடந்த தன்னை உபதேசாதிகளாலே திருத்தி நித்யஸூரிகளுடைய அநுபவத்துக்கு அர்ஹனாம்படி பண்ணின உபகாராநுஸந்தாந மென்கை.

இவ்விதம் “ஆசார்யனே நமக்கும் அனைத்தும் ஆவான்” என்று எண்ணியபடி இருப்பதற்கான காரணம் – எப்போதும் ஸம்ஸாரத்தில் உழன்றபடி இருக்கும் நம்மை உபதேசங்கள் மூலம் நன்றாகத் திருத்தி, பரமபதத்திற்குச் சென்று நித்யஸூரிகள் அனுபவத்திற்கு ஒத்த அனுபவம் பெறும்படியாக நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்றிய உபகாரத்தால் ஆகும்.