Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 319)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

இதுதான் ஔபாதிகம்.

ஆனாலிவற்றுக்கிது ஸ்வாபாவிகமோ வென்ன அருளிச்செய்கிறார் (இதுதான்) என்று தொடங்கி.

ஆனால் இவை (ஸம்ஸாரத்தை வளர்த்தல், தாழ்ந்த பலன்களை அளித்தல்) இந்த மந்த்ரங்களுக்கு இயல்பான தன்மைகளோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

(இதுதான்) என்று, க்ஷுத்ர பலப்ரதத்வத்தைப் பராமர்சிக்கிறது. (ஔபாதிகம்) என்றது, உபாதி ப்ரயுக்தமாய் வந்ததித்தனை யென்கை.

– “இதுதான்” என்பதன் மூலம் தாழ்ந்த பலன்களைக் கொடுத்தல் என்பது காட்டப்பட்டது. “ஔபாதிகம்” என்பதன் மூலம் இது செயற்கையாக வந்தது என்று கூறினார்.