Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 318)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
ஸம்ஸார வர்த்தகங்களென்கிறதும் அத்தாலே.
ஸம்ஸார வர்த்தங்களென்கிற தென்னென்ன வருளிச்செய்கிறார் (ஸம்ஸார) இத்யாதியாலே.
பகவத் மந்த்ரங்கள் ஸம்சாரத்தை வளர்ப்பவை என்று ஏன் கூறப்பட்டது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
(அத்தாலே) என்றது, கீழ்ச்சொன்ன பந்தகமான க்ஷுத்ர பலங்களைக் கொடுக்கையாலேயென்கை.
– “அத்தாலே” என்ற பதம் மூலம் ஸம்சாரத்தில் பந்தப்படுத்த ஏதுவாக உள்ள தாழ்ந்த பலன்களைக் கொடுப்பவை என்று உணர்த்தினார். இதனால் அவை ஸம்ஸாரத்தை வளர்ப்பவை என்று கருத்து.