Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 317)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

பகவந் மந்த்ரங்களை க்ஷுத்ரங்களென்கிறது பலத்வாரா.

க்ஷுத்ரங்களென்பது க்ஷுத்ரதேவதா மந்த்ரங்களையன்றோ? பகவந் மந்த்ரங்களையிப்படி சொல்லுகிறதென்னென்ன அருளிச்செய்கிறார் (பகவந் மந்த்ரங்களை) என்று தொடங்கி.

மந்த்ரங்களை தாழ்ந்தவை என்று கூறும்போது அது தாழ்ந்த தேதைகளைப் பற்றிய மந்த்ரம் மட்டுமே அல்லவோ ஆகும்? ஸர்வேச்வரனுடைய மந்த்ரங்களை இவ்விதம் உரைப்பது ஏன் என்ற கேள்விகளுக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, பரதேவதையான பகவத் விஷயமாகையாலே வந்த பெருமையையுடைய மந்த்ரங்களை க்ஷுத்ரங்களென்று சொல்லுகிறது, அர்த்த காம புத்ர வித்யாதி க்ஷுத்ரபலங்களைக் கொடுக்கிற வழியாலேயென்கை.

அனைத்திலும் உயர்ந்தவனாகிய ஸர்வேச்வரன் குறித்த மந்த்ரங்கள் என்ற பெருமை உடைய மந்த்ரங்களைத் தாழ்ந்தவை என்று கூறப்பட்டது ஏன் என்றால், அவை பொருள், இன்பம், புத்திரர்கள், கல்வி போன்ற தாழ்ந்த பலன்களை அளிப்பதால் ஆகும்.