Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 314)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
க்ருபையாலே சிஷ்யன் ஸ்வரூபம் ஸித்திக்கும், பாரதந்த்ர்யத்தாலே தன் ஸ்வரூபம் ஸித்திக்கும்.
இவற்றால் பலிக்குமவற்றை யருளிச்செய்கிறார் (க்ருபையாலே) என்று தொடங்கி.
இந்த இரண்டு குணங்கள் மூலம் பலிக்கும் விஷயங்கள் குறித்து அருளிச்செய்கிறார்.
– அதாவது, இப்படி யவன் ஸ்வரூபம் திருந்துமளவும் உபதேசாதிகளைப் பண்ணிப்போரு மிவன் க்ருபையாலே நாளுக்கு நாளும் ஸ்வரூபம் நிர்மலமாகையாலே சிஷ்யனுடைய ஸ்வரூபம் ஸித்திக்கும்; ஸ்வகர்த்ருத்வ புத்தியற்று ஸ்வாசார்ய கரண பூதனாகத் தன்னை யநுஸந்திக்கைக்கும் மற்றும் ஸர்வகார்யத்திலும் தததீநனாய் வர்த்திக்கைக்கு முடலான பாரதந்த்ர்யத்தாலே ஆசார்யனான தன்னுடைய ஸ்வரூபம் ஸித்திக்கு மென்கை. ஆக கீழ்ச்செய்ததாய்த்தது, ஹிதோபதேச ஸமயத்தில் ஸ்வவிஷயத்திலும் சிஷ்ய விஷயத்திலும் பல விஷயத்திலு முண்டாம் விப்ரதிபத்திகள் க்ரூரநிஷித்தமென்றும், அந்த விப்ரதிபத்திகள்தா னின்னதென்றும், இவன் நினையாதிருக்க த்ருஷ்ட ப்ரயோஜநாதிகள் வந்து ஸித்திக்கும் வழியும், ஸாஷாத் பலாசார்யத்வங்கள் ஸித்திக்கும் வழியும், இப்படியன்றியே விப்ரதிபத்த்யா உபதேசிக்கி லுபய ஸ்வரூபமும் ஸித்தியாமையும், ஆசார்யனானவனுக் கவச்யாபேக்ஷித குணத்வயமும், ததுபய பலமும் சொல்லிற்றாய்த்து.
சிஷ்யனுடைய ஸ்வரூபம் திருந்துகின்ற காலம் முடிய உபதேசம் செய்கின்ற ஆசார்யனுடைய கருணை காரணமாக, நாளுக்கு நாள் ஸ்வரூபத்தில் உள்ள தோஷங்கள் அழிந்தபடி உள்ளதால், சிஷ்யனுக்கு ஸ்வரூபம் கிட்டிவிடுகிறது. தான் உபதேசம் செய்வதாக எண்ணாமல், தனது ஆசார்யனின் அவயவமாகவே தன்னை எண்ணுவதாலும், தனது அனைத்து செயல்களிலும் ஆசார்யனுக்கு வசப்பட்டவனாக நடந்துகொள்ள உறுப்பாக உள்ள பாரதந்த்ர்யம் மூலம் ஆசார்யனாகிய தனது ஸ்வரூபம் கிட்டுகிறது. ஆகவே இதுவரை கூறப்பட்டது என்னவென்றால் – உயர்ந்த நன்மை குறித்து சிஷ்யனுக்கு உபதேசம் செய்யும்போது தன் விஷயத்திலும், சிஷ்யன் விஷயத்திலும், பலன் விஷயத்திலும் ஏற்படக்கூடிய மாறுபட்ட எண்ணங்கள் மிகவும் கொடியவை என்றும்; அவைதாம் இவை இவை என்றும்; இவன் விரும்பாமல் உள்ளபோதிலும் இந்த உலகப் பலன்கள் தானாகவே வந்து சேரும் வழியையும்; நேரான பலனாகிய ஆசார்யத்தன்மை கிட்டும் வழியையும்; இவ்விதம் இல்லாமல் மாறுபட்ட எண்ணத்துடன் உபதேசம் செய்தால் இருவருக்கும் ஸ்வரூபம் கிட்டாமல் போவதும்; ஆசார்யனுக்கு இருக்கவேண்டியதான க்ருபை மற்றும் பாரதந்த்ர்யம் ஆகிய இரண்டு குணங்களும்; அந்தக் குணங்களால் ஏற்படவல்ல பலனும் கூறப்பட்டது.