Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 305)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
பாகவதாபசாரமாவது அஹங்காரார்த்த காமங்களடியாக ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பண்ணும் விரோதம்.
அநந்தரம், பகவதாபசாரத்தை விவரிக்கிறார் (பாகவதாபசாரமாவது) என்று தொடங்கி.
அடுத்து பாகவத அபசாரம் குறித்து விவரிக்கிறார்.
– அதாவது, பரோத்கர்ஷங்கண்டு ஸஹியாமைக்கும் ஸ்வோத்கர்ஷ புத்திக்குமுடலான அஹங்காரமடியாகவும், அவர்கள் வைஷ்ணவாகாரத்தை புத்தி பண்ணி யிவர்களாசைப்பட்ட தொன்றாகில் இவற்றை விட்டுப் பற்றுவோமென் றிருக்கமாட்டாமல் அர்த்தகாமங்களடியாகவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குச் செய்யும் விரோதமென்கை.
மற்றவர்களின் உயர்வு கண்டு பொறுக்கமுடியாமல் இருத்தல், தன்னை உயர்ந்தவன் என்று எண்ணியபடி இருத்தல் ஆகிய இரண்டிற்கும் அஹங்காரமே காரணமாக உள்ளது. இத்தகைய அஹங்காரம் காரணமாகவும்; இவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்று எண்ணி, “இவர்கள் இந்தப் பொருளை விரும்புகிறார்கள், ஆகவே நாம் அந்தப் பொருள்களை விட்டுவிடுவோம்”, என்று எண்ணியிராமல் பொருள் மற்றும் ஆசை காரணமாகவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குச் செய்யும் விரோதம் ஆகும்.