Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 301)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அதாவது அக்ருத்யகரணமும் பகவதபசாரமும் பாகவதாபசாரமும் அஸஹ்யாபசாரமும்.

அந்நாலுபடியானவதுதா னேதென்னுமபேக்ஷையிலே (அதாவது அக்ருத்யகரணமும் பகவதபசாரமும் பாகவதாபசாரமும் அஸஹ்யாபசாரமும்) என்று அவை தன்னை யுத்தேசிக்கிறார்.

அந்த நான்கும் எவை என்ற கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக அவற்றைக் குறித்து விவரிக்கிறார்.