Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 300)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
நிஷித்தந்தானும் நாலுபடியாயிருக்கும்.
இப்படி யிருந்துள்ள நிஷித்தத்தினுடையபடியை அருளிச்செய்கிறார் (நிஷித்தந்தானும்) என்று தொடங்கி.
– இப்படியாக சாஸ்திரங்களால் தடுக்கப்பட்டவை எவை என்று அருளிச்செய்கிறார்.
– அதாவது, உபாதேயமான குணசதுஷ்டயம் போலே ஹேயமான நிஷித்தந்தானும் சதுர்விதமாயிருக்குமென்கை.
ஏற்கப்படவேண்டியதான குணங்கள் நான்காக உள்ளது போன்றே, தாழ்வானதும், கைவிடத்தக்கதும் ஆகிய குணங்களும் நான்காகும்.