Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 297)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இதுதான் அவனுக்கு முண்டு.

– இவனுடைய குணசதுஷ்டயஞ் சொன்ன ப்ரஸங்கத்திலே ஈச்வரனுக்கு மிவையுண்டென்னுமிடத்தை யருளிச்செய்கிறார் (இதுதான் அவனுக்கு முண்டு) என்று.

ஜீவாத்மாவின் நான்கு குணங்கள் குறித்துக் கூறப்பட்ட இந்த இடத்தில் ஸர்வேச்வரனுக்கும் இந்த நான்கு குணங்களும் உண்டு என்கிறார்.

– (அவன்) என்று கீழ்ச்சொல்லிக்கொண்டு வந்த ஈச்வரனைப் பராமர்சிக்கிறது.

“அவன்” என்று சூர்ணையில் உள்ள பதம் கடந்த சூர்ணைகளில் உரைக்கப்பட்ட ஸர்வேச்வரனைக் குறிப்பதாகும்.