Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 295)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இவன் தனக்கு நாலுதசைபோலே நாலுகுணமுண்டு.

– இந்த தசாசதுஷ்டய ப்ரஸங்கத்திலே, இவனுடைய குணசதுஷ்டயத்தையு மருளிச்செய்கிறார் மேல் (இவன் றனக்கு) என்று தொடங்கி.

இந்த நான்கு நிலைகள் குறித்து உரைக்கப்பட்ட இந்த இடத்தில், ஜீவாத்மாவின் நான்கு குணங்களையும் அருளிச்செய்கிறார்.

– அதாவது, இவ்வதிகாரிக்கு ஸ்வரூபௌஜ்ஜ்வல்யத்துக் குடலாகக் கீழ்ச் சொன்ன தசாசதுஷ்டயம்போலே ஸ்வரூபௌஜ்ஜ்வல்ய ஹேதுவான குணசதுஷ்டயமு முண்டென்கை.

இந்த அதிகாரியின் ஆத்மா ஒளி வீசுவதற்கான காரணமாகக் கீழே கூறப்பட்ட நான்கு நிலைகள் போன்று, இந்த ஆத்மா ஒளி வீசுவதற்குக் காரணமாக நான்கு குணங்களும் உண்டு.