Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 294)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஆர்த்தியு மபிநிவேசமு மிருக்கும்படி அர்ச்சிராதிகதியிலே சொன்னோம்.
– ஆர்த்யபிநிவேச வேஷ மிருக்கும்படி யென்னென்ன வருளிச்செய்கிறார் (ஆர்த்தியு மபிநிவேசமு மிருக்கும்படி அர்ச்சிராதிகதியிலே சொன்னோம்) என்று.
கடந்த சூர்ணையில் உரைக்கப்பட்டதான ஆர்த்தி (துக்கம்) மற்றும் அபிநிவேசம் (பெருங்காதல்) ஆகிய இரண்டும் எவ்விதம் இருக்கும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– [“இந்நின்ற நீர்மையினியா முறாமை” என்று தொடங்கி “திருவாணை நின்னாணை கண்டாய்” என்று தடுத்தும் வளைத்தும் பெறவேண்டும்படி பரமபக்தி தலையெடுத்தல்] என்னுமளவாக ஆர்த்தியிருக்கும்படியையும், [“செய்யவுடையுந் திருமுகமுஞ் செங்கனிவாயுங் குழலுங்கண்டு” என்கிறபடியே முன்புத்தை யழகை யநுபவித்து என்று தொடங்கி, தன்னைப் பெற்ற ப்ரீதியால் வந்த செவ்வியை யநுபவித்து] என்னுமளவாக அபிநிவேசமிருக்கும்படியையும் அந்த ப்ரபந்தத்திலே ஸுஸ்பஷ்டமாக அருளிச்செய்தாரிறே. ஆக, கைங்கர்ய தசைக்குமுன்பே நாலு தசையுண்டென்றும், அவை தானின்னதென்றும், அவ்வவ தசாநுகுணமான வஜ்ஞாதிகளை முன்னிடவே அவ்வவதசைகளில் ஸ்வரூப முஜ்ஜ்வலமாமென்றும், அவ்வஜ்ஞாதிகளைப் போக்குமவை ஆசார்ய ஜ்ஞாநாதிக ளென்றும், அவ்வஜ்ஞாநாதிகளுக்கு நிதாநங்களுஞ் சொல்லிற்றாய்த்து.
திருவிருத்தம் (1) – இந்நின்ற நீர்மையினியா முறாமை என்று தொடங்கி, திருவாய்மொழி (10-10-2) – திருவாணை நின்னாணை கண்டாய் – என்பது முடிய ஸர்வேச்வரனை தடுத்தும், அனைத்தும் பெறவேண்டும்படி பரமபக்தி ஏந்தி நிற்பது வரை “துக்கம்” நீடிக்கும். பெருமாள் திருமொழி (6-7) – செய்யவுடையுந் திருமுகமுஞ் செங்கனிவாயுங் குழலுங்கண்டு – என்பதற்கு ஏற்ப முன்னைய அழகை அனுபவித்து என்று தொடங்கி, தன்னைப் பெற்ற ப்ரீதி காரணமாக அவனுக்கு ஏற்பட்ட அழகை அனுபவித்து என்று முடிய பெருங்காதல் காணப்படும். இப்படியாக இவர் அருளிச்செய்த அர்ச்சிராதி என்ற க்ரந்த்தத்தில் அருளிச்செய்தார் அல்லவோ? ஆக இதுவரை கைங்கர்ய நிலைக்கு முன்பு நான்கு நிலைகள் உள்ளன என்பதும், அவை எவை என்பதும், அந்தந்த நிலைகளுக்கு ஏற்றபடியாக அறியாமை போன்றவை வெளிப்படும்போது அந்தந்த நிலைகளில் ஆத்மா ஒளிரும் என்றும், அறியாமை போன்றவற்றை நீக்குதல் ஆசார்யனின் ஞானம் முதலானவை என்றும், அந்த அறியாமை போன்றவற்றுக்கான காரணங்கள் எவை என்றும் அருளிச்செய்தார்.