Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 287)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
மடிதடவாத சோறும் சுருநாறாத பூவும் சுண்ணாம்பு படாத சாந்துமிறே யிவர்கள் கொடுத்தது.
த்ருஷ்டாந்தபூதரான வவர்கள் கிஞ்சித்கரித்த ப்ரகாரந்தன்னை யருளிச்செய்கிறார் (மடிதடவாத) என்று தொடங்கி.
கடந்த சூர்ணையில் உதாரணமாகக் கூறப்பட்டவர்கள் செய்த கைங்கர்யத்தின் வகையை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– (மடிதடவாத சோறாவது) – முந்துற வாதரத்தோடே யிட்டு பின்னை இதுக்குக் காசு தரலாகாதோ என்று மடிச்சீலை சோதிக்கைக்காக மடியைப் பிடித்துத் தடவி உண்டவன் நெஞ்சு உளையும்படி பண்ணும் ப்ரயோஜநாந்தர பரரிடுஞ் சோறு போலன்றிக்கே, உண்டவன் நெஞ்சு உகக்கும்படி அநந்யப்ரயோஜநமான சோறு; இப்படியிருந்துள்ள சோறிறே, “புக்தவத்ஸுத்விஜாகர்யேஷு நிஷண்ண: பரமாஸநே, விதுராந்நாநிபுபுஜே சுசீநி குணவந்திச” என்று பாவநத்வ போக்யத்வ ப்ரசஸ்தமாம்படி ஸ்ரீவிதுரரவனுக்கு ஸமர்ப்பித்தது. (சுருநாறாத பூவாவது) அக்நி ஸ்பர்சமுண்டானால் சுரு நாறும்படியிறே பூவின் ஸ்வபாவமிருப்பது; அப்படியே, ப்ரயோஜநாந்தர ஸ்பர்சமாகிற சுருநாற்றமில்லாதபடி அநந்யப்ரயோஜநத்வ பரிமளயுக்தமாகவிடும் புஷ்பம்; இப்படியிருந்துள்ள பூவிறே, “ப்ரஸாத பரமௌ நாதௌ மமகேஹ முபாகதௌ, தந்யோஹ மர்ச்சயிஷ்யா மீத்யாஹ மால்யோப ஜீவந:” என்று விசேஷஜ்ஞர் ச்லாகிக்கும்படி அத்யாதர பூர்வகமாக ஸ்ரீமாலாகாரரவனுக்குக் கொடுத்தது. – (சுண்ணாம்புபடாத சாந்தாவது) – ஆயிரம் பொன்னழியக் கூட்டியும் சுண்ணாம்பு திவலைபடக் கெடும்படியிறே சாந்தின் ஸ்வபாவம்; அப்படியே ப்ரயோஜநாந்தர ஸ்பர்சமாகிற தோஷமின்றிக்கே அநந்ய ப்ரயோஜநமான சாந்து; இப்படியிருந்துள்ள சாந்திறே “ஸுகந்த மேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிராநநே, ஆவயோர் காத்ர ஸத்ருசம் தீயதா மநுலேபநம்” என்று அவனர்த்தித்த வநந்தரம் பூசுஞ்சாந்தாம்படி கூனி கொடுத்தது. ஆக, இப்படி அநந்ய ப்ரயோஜநமாக கிஞ்சித்கரித்தாலாய்த்து கைங்கர்யாச்ரயமான ஸ்வரூப முஜ்ஜ்வலமாவ தென்கை. ஆக, இவ்வளவும் வஸ்தவ்யாதி கணநையில் சரமோக்தமான கர்த்தவ்யரூப கைங்கர்யத்தை சோதித்து தாத்ருச கைங்கர்யத்தாலே ஸ்வரூப முஜ்ஜ்வலமாமென்னுமிடத்தையு மருளிச்செய்தாராய்த்து.
(மடிதடவாத சோறாவது) - முதலில் ஆசையுடன் ஒருவனுக்கு உணவு அளிக்கக்கூடும். அதன் பின்னர் அவன் அதற்கான விலையை அளிக்க்க்கூடாதோ என்ற ஆசை ஏற்படக்கூடும். இதற்கு அவனிடம் பணம் உள்ளதா என்று சோதிக்கும் விதமாக அவனுடைய மடியை பிடித்துத் தடவக்கூடாது. இது போன்று செய்து, உண்டவனுடைய நெஞ்சத்தை வருத்தம் கொள்ளும்படிச் செய்பவர்கள் அளிக்கின்ற உணவு போன்று அல்லாமல், உண்டவனின் நெஞ்சம் மகிழும்படியாக எந்தப் பயன்களையும் எதிர்பார்க்காத உணவு என்று கருத்து. இப்படிப்பட்ட உணவை, மஹாபாரதம் உத்யோகபர்வம் - புக்தவத்ஸுத்விஜாகர்யேஷு நிஷண்ண: பரமாஸநே, விதுராந்நாநிபுபுஜே சுசீநி குணவந்திச - அந்தணர்கள் உணவு உண்ட பின்னர், உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த க்ருஷ்ணன், தூய்மையாகவும் இனிமையாகவும் உள்ளதான விதுரரின் உணவினை ஏற்றுக்கொண்டான் – என்று கூறுவதற்கு ஏற்ப, தூய்மையும் இனிமையும் கலந்து விதுரர் அளித்தார் அல்லவோ? (சுருநாறாத பூவாவது) - நெருப்பு பட்டவுடன் பொசுங்கும் வாசம் வீசுவது போன்று அல்லவோ மலரின் இயல்பு உண்டு? இது போன்று மற்ற பயன்களை நாடுதல் என்பதான பொசுங்கல் வாசம் இல்லாதபடியாக, மற்ற பயன் நாடாமல் இருத்தல் என்பதான நறுமணத்துடன் கூடியதான மலரை உரைக்கிறார். இப்படியாக உள்ள மலர் எது? ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-9-20) – ப்ரஸாத பரமௌ நாதௌ மமகேஹ முபாகதௌ, தந்யோஹ மர்ச்சயிஷ்யா மீத்யாஹ மால்யோப ஜீவந: - க்ருபையுடன் கூடிய க்ருஷ்ணனும் பலராமனும் இன்று எனது இல்லத்திற்கு எழுந்தருளியுள்ளனர்; மிகுந்த புண்ணியம் செய்துள்ள நான் அவர்களை ஆராதிக்கப்போகிறேன் என்று மாலை கட்டுபவன் உரைத்தான் – என்று மிகுந்த அறிவு கொண்ட பராசரர் உரைத்தது போன்று, மாலை தொடுப்பவன் மிகுந்த அன்புடன் க்ருஷ்ணனுக்கு அளித்த மலரே இங்கு உரைக்கப்பட்டது. (சுண்ணாம்புபடாத சாந்தாவது) – ஆயிரம் பொற்காசு செலவு செய்து அரைக்கப்பட்ட சந்தனம் என்பது ஒரு துளி சுண்ணாம்புக் கரைசல் பட்டால் வீணாகப் போகும் என்றபடி உள்ளதே சந்தனத்தின் இயல்பாகும். இப்படியாக மற்ற பயன்களை நாடுதல் என்பதான சுண்ணாம்பு கலவாமல், எந்தவிதமான பயனையும் எண்ணாமல் அளிக்கப்படும் சந்தனம் இங்கு உரைக்கப்பட்டது; இது என்ன? ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-20-3) - ஸுகந்த மேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிராநநே, ஆவயோர் காத்ர ஸத்ருசம் தீயதா மநுலேபநம் – அழகான முகம் கொண்ட கூனியே! இந்தச் சந்தனம் வாசனை பொருள்கள் கலந்தது; இது அரசர்களுக்கு மட்டுமே ஏற்றது; இது குங்குமப்பூவுடன் சேர்க்கப்பட்டது; ஆகவே எங்களுடைய சரீரத்திற்கு ஏற்றபடியாக உள்ள இந்தச் சந்தனத்தை எங்களுக்கு அளிப்பாயாக – என்று க்ருஷ்ணன் விருப்பத்துடன் கேட்டான். உடனேயே, திருவாய்மொழி (4-3-1) – பூசும் சாந்து - என்பதற்கு ஏற்ப, க்ருஷ்ணனுக்கு அதனைக் கூனி அளித்தாள். எனவே மற்ற எந்தவிதமான பயனையும் எதிர்பாராமல் கைங்கர்யம் செய்தால் மட்டுமே, கைங்கர்யம் செய்வதன் பலன் காரணமாக ஆத்மா ப்ரகாசம் அடைகிறது என்று கருத்து. இப்படியாகச் சூர்ணை 274ல் வஸ்தவ்யம் போன்ற பலவிதமான கைங்கர்யங்களில் கூறப்பட்டதான தோஷங்களை விலக்கி, அப்படிப்பட்ட கைங்கர்யம் காரணமாகவே ஆத்மா தனது ப்ரகாசத்தை அடையும் என்பதை அருளிச்செய்தார். ன்னழியக்கூட்டியும் சுண்ணாம்பு திவலைபடக் கெடும்படியிறெ சாந்தின ஸ்வபாவம்; அப்படியே ப்ரயோஜநாந்தர ஸ்பர்சமாகிற தோஷமின்றீன்க்கே அந்