Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 286)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஸ்ரீவிதுரரையும் ஸ்ரீமாலாகாரரையும் கூனியையும் போலே கிஞ்சித்கரித்தால் ஸ்வரூபம் நிறம் பெறுவது.
இப்படி அநந்யப்ரயோஜநனாய் கிஞ்சித்கரித்தாலாய்த்து ஸ்வரூப முஜ்ஜ்வலமாவ தென்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச்செய்கிறார் மேல் (ஸ்ரீவிதுரரையும்) என்று தொடங்கி.
– இவ்விதமாக எந்தவிதமான பயனையும் எதிர்பாராமல் கைங்கர்யம் செய்தால் மட்டுமே ஜீவன் ப்ரகாசம் அடையும் என்பதை ஓர் உதாரணம் மூலம் அருளிச்செய்கிறார்.