Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 284)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அதாவது, தான் கையேலாதே அவனைக் கையேற்கப் பண்ணுகை.
இத்தை விசதீகரிக்கிறார் மேல் (அதாவது) என்று தொடங்கி.
– கடந்த சூர்ணையில் உரைத்தவற்றை மேலும் விவரிக்கிறார்.
– (அதாவது) என்றது, இத்தை ஸாதநமாக்காதே பலமாக்குகையாவ தென்றபடி. (தான் கையேலாதே அவனைக் கையேற்கப்பண்ணுகையாவது) – கைங்கர்யம் பண்ணுகிற தான் அதுக்குப் பலமாக வவன்பக்கலிலே யொன்றை அர்த்தியாதே ஸ்வயம் ப்ரயோஜநமாகச் செய்யா நின்று கொண்டு, கைங்கர்யங் கொள்ளுகிறவனை “தாஸ் ஸர்வாச் சிரஸா தேவ: பரதிக்ருஹ்ணாதிவை ஸ்வயம்” என்கிறபடியே தன் பூர்த்தி பாராதே ஸாபேக்ஷனாய் விரும்பிக் கொள்ளும்படி பண்ணுகை.
– “அதாவது” என்றால் இந்தக் கைங்கர்யத்தைச் சாதனம் என்று கொள்ளாமல் பலன் என்று கொள்ளுதல் என்று கருத்து. “தான் கையேலாதே அவனைக் கையேற்கப்பண்ணுகையாவது” என்பது – கைங்கர்யம் செய்கின்ற ஒருவன் அதற்குப் பலனாக ஸர்வேச்வரனிடம் எதனையும் வேண்டிக் கொள்ளாமல், “கைங்கர்யம் செய்வதே பலன்” என்று எண்ணியபடிச் செய்யவேண்டும். கைங்கர்யத்தைக் கொள்ளும் ஸர்வேச்வரன், மஹாபாரதம் - தாஸ் ஸர்வாச் சிரஸா தேவ: பரதிக்ருஹ்ணாதிவை ஸ்வயம் - பரமைகாந்திகளால் செய்யப்படும் எந்தவிதமான கைங்கர்யங்களையும் ஸர்வேச்வரன் தனது தலையால் ஏற்கிறான் - என்பதற்கு எற்றபடி, தனக்கு எல்லாம் கிடைத்தது போன்று, விருப்பத்துடன் ஏற்கும்படியாகச் செய்யவேண்டும் (அதாவது ஸர்வேச்வரன் இந்தக் கைங்கர்யத்தை எதிர்பார்த்தபடி உள்ளவனாகச் செய்யவேண்டும்).