Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 272)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
விஷய தோஷத்தாலே வருமவையெல்லாம் துஸ்த்யஜமாயிறேயிருப்பது.
இப்படி ஆச்ரயதோஷ ஜந்யமன்றிக்கே விஷயதோஷ ஜந்யமானாலும் ஸ்வரூபவிருத்தமானது த்யாஜ்யமன்றோ வென்ன வருளிச்செய்கிறார் மேல் (விஷய தோஷத்தாலே) என்று தொடங்கி.
– இப்படியாக ஜீவனின் குற்றத்தால் வராமல், ஸர்வேச்வரனிடம் உள்ள இன்பம் என்பதால் வந்தபோதிலும், ஆத்ம ஸ்வரூபத்திற்கு விரோதமாக உள்ள “தனக்கு ஏற்படும் ஆனந்தத்தை விரும்புதல்” என்பது விலக்க வேண்டியது அல்லவோ என்ற சந்தேகத்திற்கு விடை அளிக்கிறார்.
– அதாவது, அநுபவ விஷயமான வவனுடைய வயிரவுருக்காய் ஆண்களையும் பெண்ணுடை யுடுத்தும்படியான விக்ரஹ வைலக்ஷண்யமாகிற தோஷத்தாலே வருகிற ஸ்வப்ரயோஜநபரதை, தத்தேதுவான ப்ராவண்யம், தத்ஸித்த்யர்த்தமான வ்யாபாரங்களாகிற விவையெல்லாம் ஸ்வரூபவிருத்தமென்று விடப்பார்த்தாலும் விட வரிதாயிறே யிருப்பதென்கை. (விஷய தோஷத்தாலே வருமது) என்று பாடமானபோது, ஸ்வப்ரயோஜந மாத்ரத்தையே சொல்லுகிறது.
“விஷயதோஷத்தால்” என்பது என்ன? அனுபவிக்கப்படும் ஸர்வேச்வரனுடைய மிகவும் சிறந்ததாக உள்ளதும், இதனைக் காண்கிற ஆண்களையும் நாயகி பாவத்தில் பெண் உடை அணிந்து கொள்ளும்படிச் செய்வதும் ஆகிய ஸர்வேச்வரனின் திருமேனி என்பது சிறப்புடன் இருத்தல் என்ற தன்மை கொண்டுள்ளது; இதுவே ஸ்வப்ரயோஜன நிலையை அடையச் செய்யும் குற்றத்தைப் புரிகிறது; இதனால் அவன் மீது ஆசை, அந்த ஆசை நிறைவேறும் பொருட்டு நோன்பு நோற்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனையே இங்கு உரைக்கிறார். இவை ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு முரணாக உள்ளது என்ற போதிலும், விடுவதற்கு மிகவும் அரிதாக உள்ளது என்று கருத்து. சூர்ணையில் உள்ள “விஷயதோஷத்தால் வருமவை” என்பதற்குப் பதிலாக “விஷயதோஷத்தால் வருமது” என்று சிலர் படிப்பர்; இவ்விதம் கொண்டால் ”ஸ்வப்ரயோஜனம்” என்பது குறித்து மட்டுமே கூறப்பட்டது என்று கொள்க.