Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 271)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஆகையாலே தோஷமில்லை.
– இவ்வர்த்தத்தை நிகமிக்கிறார் (ஆகையாலே தோஷமில்லை) என்று தொடங்கி.
– கடந்த சூர்ணையில் அருளிச்செய்தவற்றை முடிக்கிறார்.
– அதாவது, ப்ராதிகூல்ய ஹேதுவாகச் சொல்லப்பட்ட ஸ்வப்ரயோஜநம் ஆச்ரயதோஷ ஜந்யமாய், ஆழ்வார்கள் பக்கல் ஸ்வப்ரயோஜநம் விஷயதோஷ ஜந்யமா யிருக்கையாலே, அந்த ப்ராதிகூல்யம் இவர்கள் பக்கலிலும் வருமென்கிற தோஷமில்லை யென்கை. அன்றிக்கே, ஸ்வப்ரயோஜநபரரை ஸாமாந்யேந ப்ரதிகூலரென்று சொல்லுமளவில், அநுகூலரான ஆழ்வார்கள் பக்கலிலுமிந்த ஸ்வப்ரயோஜநபரதை தோற்றுகையாலே அவர்களையும் ப்ராதிகூலரென்று நினைக்கவேண்டி வருகையால், ஸ்வப்ரயோஜநபரரை ப்ரதிகூலரென்கை தோஷமன்றோவென்று நினைத்துப் பண்ணுகிற சங்கையை யநுவதிக்கிறார் (ஸ்வப்ரயோஜநபர ரெல்லாரையும் ப்ரதிகூலராக நினைக்கலாமோ வென்னில்) என்று. அத்தைப் பரிஹரிக்கிறார் (இங்கு) என்று தொடங்கி. அர்த்தம் பூர்வவத். நிகமிக்கிறார் (ஆகையாலே தோஷமில்லை) என்று. (ஆகையாலே) என்கிற விதுக்கர்த்தம் பூர்வவத். (தோஷமில்லை) என்றது, ஸ்வப்ரயோஜநபரரை ப்ரதிகூலரென்று சொன்னதில் தோஷமில்லை யென்கை - என்று இங்ஙனே யோஜிக்கவுமாம்.
ஆகவே ப்ரதிகூலராக ஒருவர் உள்ளார் என்பதற்குக் காரணமாக உரைக்கப்பட்ட ஸ்வப்ரயோஜனம் என்பது ஜீவனுடைய தோஷம் காரணமாக ஏற்படுவதாலும், ஆழ்வார்களிடம் காணப்படும் ஸ்வப்ரயோஜனம் என்பது பகவத் விஷயத்தின் இனிமை என்ற தோஷம் காரணமாக எற்படுவதாலும், ஆழ்வார்களிடம் உள்ள ஸ்வப்ரயோஜநம் என்பதற்குத் தோஷம் இல்லை என்று கருத்து. அல்லது வேறு விதமாகவும் விளக்கம் கூறலாம். “தங்களுடைய ஆனந்தத்தை விரும்புகின்ற அனைவரையும் ப்ரதிகூலர்கள்” என்று கூறுவதாக வைத்துக்கெள்வோம். இவ்விதம் கொண்டால், அநுகூலர்களாக உள்ள ஆழ்வார்களும் ஒரு சில இடங்களில் தங்களுடைய ஆனந்தத்தை விரும்புவது போன்று அருளிச்செய்துள்ளதைக் காணமுடியும் என்பதால், அவர்களையும் ப்ரதிகூலர்கள் என்றே எண்ணவேண்டும் என்றாகிறது அல்லவோ; இதனைப் போக்கவே சூர்ணை269ல் ஸ்வப்ரயோஜன- என்று கேள்வி எழுப்பிக்கொண்டல் அநுகூலர்களாக உள்ல அழ்வார்களும் ஒரு சில இடங்களில் தங்களுடைய ஆனந்தத்தை விரும்புவது போன்று அருளிச்செய்துள்ளதை காணமுடியும் என்பதால் அவர்களையும் ப்ரதி கூலர்கள் என்றே எண்ணவேண்டும் என்றாகிறது; இதனைப்போக்கவே சூர்ணை 269ல் – ஸ்வப்ரயோஜன பரரெல்லாரையும் ப்ரதிகூலராக நினைக்கலாமோ வென்னில் - என்று கேள்வி எழுப்பிக்கொண்டார். அதற்கான விடையை சூர்ணை 270ல் – இங்கு ஸ்வப்ரயோஜந மென்கிறது ஆச்ரயதோஷ ஜந்யமானத்தை - என்பதில் உரைத்தார். இப்போது அந்த விஷயம் குறித்த கேள்வி பதில் பகுதியை, “ஆகையால்” என்று கூறி முடிக்கிறார். “ஆகையால்” என்பதற்கு முன்பு கூறப்பட்ட பொருளையே கொள்ளவேண்டும். “தோஷம் இல்லை” என்றால் தனது இன்பத்தில் நாட்டம் உள்ளவர்களை ப்ரதிகூலர் என்று உரைப்பதில் தவறு ஏதும் இல்லை என்று பொருள்.