Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 270)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இங்கு ஸ்வப்ரயோஜந மென்கிறது ஆச்ரயதோஷ ஜந்யமானத்தை.
– அத்தைப் பரிஹரிக்கிறார் (இங்கு) என்று தொடங்கி.
கடந்த சூர்ணையில் எழுந்த கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ப்ரதிகூலமாகச் சொல்லுகிற இவ்விடத்தில், ஸ்வப்ரயோஜநமென்கிறது, அநுபவ கைங்கர்யங்களுக்காச்ரயமான சேதநனுடைய அவித்யாதி தோஷத்தால் வந்த ஸ்வப்ரயோஜநத்தை என்கை. இத்தை (ஆச்ரயதோஷஜந்யம்) என்றொதுக்குகையாலே, ஆழ்வார்களுடைய ஸ்வப்ரயோஜநம் விஷயதோஷ ஜந்யமென்று கருத்து. இது தன்னை (விஷயதோஷத்தாலே வருமவை) என்கிற வாக்யத்திலே வ்யக்தமாக வருளிச்செய்கிறாரிறே.
ப்ரதிகூலர்களின் வகைகள் குறித்து உரைக்கும்போது “ஸ்வயம் ப்ரயோஜனம்” என்று கூறப்பட்டது என்னவென்றால் (சூர்ணை263ல் காண்க) – ஸர்வேச்வரனின் கைங்கர்யம் மற்றும் அனுபவம் ஆகியவை ஏற்படுகின்ற ஜீவனுக்கு, அவனது அறியாமை காரணமாக அவற்றில் தன்னுடைய ஆனந்தத்தை விரும்பி நிற்கும் நிலை ஆகும். இதனை “ஆச்ரய = தனது அறியாமையால் உண்டான தோஷம் காரணமாக ஏற்படுவது” என்று இந்தச் சூர்ணையில் விளக்குகிறார். ஆனால் ஆழ்வார்களின் ஸ்வப்ரயோஜனம் என்பது ஸர்வேச்வரனின் திருமேனி அழகு, குணங்கள் போன்றவற்றால் ஏற்படுவதாகும். இதனை சூர்ணை 272ல் விளக்கக் காணலாம்