Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 258)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஆகையாலே மங்களாசாஸநம் ஸ்வரூபாநுகுணம்.

உக்தார்த்தத்தை நிகமித்தருளுகிறார் (ஆகையாலே) என்று தொடங்கி.

– இதுவரை கூறி வந்த திருப்பலாண்டு குறித்த ப்ரகரணத்தை நிறைவு செய்கிறார்.

அதாவது இப்படி சேஷபூதரானவர்களுக்கெல்லாம் அவச்ய கர்த்தவ்யமாயிருப்ப தொன்றாகையாலே, மங்களாசாஸநம் ஸ்வரூபத்துக்குச் சேருமென்கை. சேஷ வஸ்துவாகில் சேஷிக்கதிசயத்தை விளைத்தே தன் ஸ்வரூப ஸித்தியாகையாலே, சேஷிக்கதிசயத்தை யாசாஸிக்கிறவிது சேஷபூதனானவிவனுடைய ஸ்வரூபத்துக்கநுகுணமிறே.

– இப்படியாக ஸர்வேச்வரனுக்கு அடிமையாக இருப்பவர்கள் அனைவராலும் அவசியம் செய்யத்தக்கதாகத் திருப்பல்லாண்டு உள்ளதால், அது ஸ்வரூபத்திற்கு ஏற்றதாகும். அடிமையாக இருக்கும் வஸ்துவானது தனது எஜமானனுக்கு ஏதேனும் மேன்மையை உண்டாக்கினால் மட்டுமே தன்னுடைய ஸ்வரூபத்தை நிலை நிறுத்திக் கொள்ள இயலும்; ஆகவே ஸர்வேச்வரனுக்கு மேன்மையை ஏற்படுத்தவல்ல திருப்பல்லாண்டு என்பது அடிமையாக உள்ள நம்முடைய ஸ்வரூபத்திற்கு அவசியமான ஒன்றாகிறது.