Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 250)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஆழ்வார்களெல்லாரையும் போலல்லர் பெரியாழ்வார்.
இவ்வாழ்வார்கள் தாங்கள் மங்களாசாஸநத்தில் வந்தால் தங்களி லொப்பர்களொ வென்ன வருளிச்செய்கிறார் மேல் (ஆழ்வார்கள்) என்று தொடங்கி.
இந்த ஆழ்வார்கள் ஸர்வேச்வரனுக்குத் திருப்பல்லாண்டு பாடுவதில் ஒருவருக்கு ஒருவர் ஒத்தவர்களாக இருப்பார்களோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, மங்களாசாஸநத்தில் மற்றுள்ள வாழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் நெடுவாசி யுண்டென்கை.
திருப்பல்லாண்டு பாடுவதைப் பொறுத்தவரை மற்ற ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் வேறுபாடு உண்டு என்பதை அறியவேண்டும்.