Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 235)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ப்ராதுர்ப்பாவை: இத்யாதி.
– இனி, பாகவத ஜந்மாதி ச்லாக்யதா கதநபூர்வகமாக, அபாகவதோத்கர்க்ஷ நிந்த்யதையை ப்ரகாசிப்பிக்கிறார் (ப்ராதுர்ப் பாவை) இத்யாதி என்று.
– அடுத்து பாகவதர்களின் பிறப்பு போன்ற பலவும் சிறந்தவை என்றுள்ளதை முன்னிட்டுக்கொண்டு, பாகவதர் அல்லாதவரின் மேன்மைகள் தாழ்ந்தவையே என்பதை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– “ப்ராதுர்ப்பாவைஸ் ஸுரநர ஸமோ தேவதேவஸ் ததீயா ஜாத்யா வ்ருத்தைரபிச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா, கிந்து ஸ்ரீமத், புவநபவந த்ராணதோந்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்பகல்ப: ப்ரகர்ஷ:” இத்தால் - அயர்வறு மமரர்களதிபதியானவன் ப்ராதுர்ப் பாவங்களாலே ஸுர நர ஸஜாதீயனாகா நிற்கும், ததீயரும் ஜாதியாலும் வ்ருத்தங்களாலும் குணத்தாலுமப்படியே இதர ஸமரா இருப்பார்கள், இதில் கர்ஹையில்லை, ச்லாக்யையே யுள்ளது, உபயருமிப்படி நிற்கிறது இந்த லோகரக்ஷண நிமித்தமாக, இனி அபாகவதர் பக்கலுண்டான வித்யா வ்ருத்த பாஹுள்ய ரூபமான உத்கர்ஷம் விதவாலங்காரம்போலே நிந்த்யமாகா நின்றதென்கிறது.
ப்ராதுர்ப்பாவைஸ் ஸுரநர ஸமோ தேவதேவஸ் ததீயா ஜாத்யா வ்ருத்தைரபிச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா, கிந்து ஸ்ரீமத், புவநபவந த்ராணதோந்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்பகல்ப: ப்ரகர்ஷ: - ஸர்வேச்வரன் தன்னுடைய பல அவதாரங்களில் தேவர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோருக்கு ஒத்தபடி அவதரிக்கிறான்; அவனது ஸம்பந்தம் காரணமாக உயர்ந்த ஞானம் பெற்றவர்கள் பிறந்த குலம், ஒழுக்கம் மற்றும் குணங்களால் அவ்விதமே பிறக்கின்றனர்; பாகவதர்களைப் பொறுத்தவரை இது இகழத்தகுந்தது அல்ல (அதாவது இவ்விதம் மற்றவர்களுக்குச் சமமாகப் பிறத்தல்). பாகவதர்கள் விஷயத்தில் இது எவ்விதம் உயர்ந்தது என்றால் அவர்கள் உலகைக் காப்பாற்றும் பொருட்டு அவதரிப்பதால் ஆகும். பாகவதர்கள் அல்லாதவர்களிடம் காணப்படும் கல்வி, ஒழுக்கம் போன்றவற்றின் மேன்மை என்பது விதவையின் அலங்காரம் போன்று பழிப்பதற்கு ஏற்றதாக ஆகிறது - என்றது காண்க. ஆக, அயர்வறும் அமரர்களின் அதிபதியான ஸர்வேச்வரன் தனது அவதாரங்கள் காரணமாக தேவர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியவர்களுடன் ஒத்தவனாகவே நிற்பான்; அவனால் ஞானம் பெற்ற முமுக்ஷுக்கள் குலம், ஒழுக்கம் மற்றும் குணம் ஆகியவற்றால் மற்ற மனிதர்கள் போன்றே இருப்பார்கள்; இவற்றில் எந்தவிதமான தாழ்வும் இல்லை, உயர்வே உள்ளது. ஏனென்றால் இவர்கள் இவ்விதம் உள்ளது என்பது, இந்த உலகத்தைக் காப்பாற்றும் பொருட்டே என்பதால் ஆகும். பாகவதர்கள் அல்லாதவர்களிடம் காணப்படுகின்ற கல்வி, ஒழுக்கம் போன்றவை மூலம் அவர்களுக்கு உண்டாகும் மேன்மை என்பது விதவைக்குச் செய்யும் அலங்காரம் போன்று பலராலும் பழிக்கப்படுவதே ஆகும்.