Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 225)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இப்படி நினையாதொழிகையு மபசாரம்.

இப்படி நினையாதபோது வருமநர்த்தமுண்டோ வென்ன வருளிச் செய்கிறார் (இப்படி) என்று தொடங்கி.

– இவ்விதம் எண்ணாதபோது ஏற்படக்கூடிய தீமை ஏதேனும் உண்டா என்ற சந்தேகத்திற்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, ஜந்மாதிகளை யிட்டு நிகர்ஷபுத்தி பண்ணுகை அபசாரமானாப் போலே, இப்படி கௌரவித்து நினையாதொழிகையும் அபசாரமாய்த் தலைக்கட்டு மென்றபடி.

பிறப்பு போன்றவற்றை முன்னிட்டு ஸ்ரீவைஷ்ணவர்களைத் தாழ்வாக எண்ணுவது அபசாரம் என்று கூறப்பட்டது. இதே போன்று இவர்களை (ஆசார்யனுக்கு ஒத்தவர்கள் என்று) எண்ணாமல் இருப்பது அபசாரமே ஆகிறது.