Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 224)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஆசார்யஸாம்யத்துக்கடி ஆசார்யவசனம்.
– ஆசார்யனோடொரு விஷயத்தையும் ஸமபுத்தி பண்ணுகை அயுக்தமாயிருக்க, ஆசார்ய ஸாம்ய புத்திக்கடியேதென்னு மாகாங்க்ஷையிலே யருளிச் செய்கிறார் (ஆசார்ய) இத்யாதியாலே.
ஆசார்யனுக்கு ஈடாக வேறு யாரையும் எண்ணுதல் என்பது ஏற்கக்கூடாது ஒன்றாகும். அப்படி உள்ளபோது இவர்கள் ஆசார்யனை ஒத்தவர்கள் என்று எண்ணுவதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஆசார்ய ஸாம்ய ப்ரதிபத்திக்கு மூலம் – ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டால் நம்மைக் கண்டாப்போலே காணும், என்று உபதேச ஸமயத்திலே ஆசார்யனருளிச் செய்த வசநமென்கை.
ஆசார்யனை ஒத்தவர்கள் என்று எண்ணுவதற்கு மூலகாரணம், “ஸ்ரீவைஷ்ணவர்களைக் காணும்போது நம்மைக் (ஆசார்யன் தன்னைக் கூறிக் கொள்ளுதல்) காணுவது போன்று இருத்தல் வேண்டும்”, என்று உபதேசம் செய்யும்போது ஆசார்யன் அருளிச்செய்தலே ஆகும்.