Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 222)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இவர்கள் பக்கல் ஸாம்யபுத்தியு மாதிக்யபுத்தியும் நடக்கவேணும்.
இப்படி ஸ்வஸம்பந்தத்தாலே யித்தலையில் தோஷத்தைக் கழித்து ஸ்வஸாம்யாபத்தியைத் தரும் விலக்ஷணரானவர்களை எங்ஙனே ப்ரதிபத்தி பண்ணிருக்க வேணுமென்ன வருளிச்செய்கிறார்.
– இப்படியாகத் தங்களது ஸம்பந்தம் என்பதன் மூலம் அந்தணர்களின் தோஷத்தைக் கழித்து, தங்களுக்கு ஒத்த மேன்மையைக் கிட்டச் செய்கின்ற, மேன்மையான பாகவதர்களை எவ்விதம் ஒருவன் எண்ணவேண்டும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
(இவர்கள் பக்கல் ஸாம்யபுத்தியும் ஆதிக்ய புத்தியும் நடக்கவேணும்) என்று.
அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குப் பிறவியால் சமம் ஆனவர்கள் என்றும், தங்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்றும் எண்ணவேண்டும்.