Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 219)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஸம்பந்தத்துக்கு யோக்யதை யுண்டாம்போது ஜன்மக்தொத்தை போகவேணும்.

தத்ஸம்பந்தயோக்யதை ஸம்பவிக்கும்படி யென்னென்ன வருளிச் செய்கிறார் (ஸம்பந்தத்துக்கு) என்று தொடங்கி.

– அப்படிப்பட்ட மேன்மையான சிறந்த பாகவதர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்படியான தகுதி எவ்விதம் உண்டாகும் என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார்.

– அதாவது, அந்த விலக்ஷணரோட்டை ஸம்பந்தத்துக்கு அர்ஹதையிவனுக் குண்டாம்போது, தன்னுடைய ஜந்மகதமான கொத்தை கழியவேணுமென்றபடி.

அப்படிப்பட்ட உயர்ந்த பாகவதர்களுடனான ஸம்பந்தம் ஏற்படுவதற்கு, உயர்பிறவியில் பிறந்தான் என்று எண்ணப்படுகின்ற இவனுடைய பிறவி காரணமாக ஏற்படும் தோஷம் நீங்கவேண்டும் (இங்கு தோஷம் என்பது அஹங்காரம் போன்றவை).