Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 218)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

நிக்ருஷ்ட ஜந்மத்தால் வந்த தோஷம் சமிப்பது விலக்ஷண ஸம்பந்தத்தாலே.

தாழ்ந்த ஜன்மம் எது என்றும், உயர்ந்த ஜன்மம் எது என்றும் கடந்த சில சூர்ணைகளில் உறுதி செய்யப்பட்டது. அப்படியாக உள்ள பிறவுகளில், தாழ்ந்த பிறப்பு மூலம் ஏற்படும் தோஷம் எவ்விதம் நீங்கும் என்ற கேள்விக்கான விடையை இங்கு அருளிச்செய்கிறார்.

ஆக, நிக்ருஷ்டோத்க்ருஷ்ட ஜந்மங்களின்னதென்று நிச்சயிக்கப்பட்டது கீழ்; அதில் நிக்ருஷ்ட ஜந்மத்தால் வந்த தோஷம் சமிப்பதெத்தாலேயென்ன வருளிச் செய்கிறார் மேல் (நிக்ருஷ்ட) இத்யாதியாலே.

– அதாவது, அஹங்கார ஹேதுதயா நிக்ருஷ்டமான ஜந்மமடியாக வந்த நைச்யம் பாவிக்க வேண்டுகை முதலான தோஷம் மறுவலிடாதபடி மாறுவது, ஜந்மஸித்தமான நைச்யத்தையுடையராய் உபாயாந்தராந்வயயோக்யதா கந்த ரஹிதரா யிருக்கும் விலக்ஷணாதிகாரிகளோடுண்டான சேஷத்வரூப ஸம்பந்தத்தாலே யென்கை.

அஹங்காரத்தின் விளைவால் (அல்லது அஹங்காரம் ஏற்படக் காரணமாக உள்ளதால்), உண்மையாகவே தாழ்ந்த அந்தணப்பிறவி உள்ளவர்கள், தங்களுக்குத் தாழ்வை செயற்கையாக உண்டாக்கிக் கொள்ளுதல் போன்ற தோஷங்கள் ஏற்படாமல் நீக்குவது எப்படி என்றால் - பிறப்பிலேயே ஏற்பட்ட தாழ்வைக் கொண்டவர்களாக, கர்மம்-ஞானம்-பக்தி போன்ற எந்தவிதமான உபாயங்களையும் கைக்கொள்ளத் தகுதி அற்றவர்களாக உள்ள மிகவும் சிறந்த பாகவதர்களின் அடிமை என்ற தொடர்பு மூலமே நீங்கும் என்று கொள்ளவேண்டும்.