Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 216)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஆகையாலே உத்க்ருஷ்ட ஜந்மமே ச்ரேஷ்டம்.

இவ்வர்த்தத்தை நிகமிக்கிறார் (ஆகையாலே) என்று தொடங்கி.

– இதுவரை கூறிவந்ததை நிறைவு செய்கிறார்.

(ஆகையால்) என்றது, இப்படி அது ஸதோஷமும் இது நிர்தோஷமுமாகை யாலென்றபடி. (உத்க்ருஷ்டஜந்மமே ச்ரேஷ்டம்) என்றது, சேஷத்வோசிதமாய்க் கொண்டு உத்க்ருஷ்டமாயிருக்கிற விந்த ஜந்மமே ததநுசித ஜந்மத்தைப்பற்ற ச்ரேஷ்டமென்றபடி.

– ”ஆகையால்” என்பதன் மூலம் பிறப்பினால் கூறப்படும் உயர்வு என்பது தோஷம் கொண்டது என்றும், பிறப்பினால் தாழ்ச்சி என்று கூறுவதும் தோஷம் கொண்டது என்றும் உள்ளதன் காரணமாக – என்று உணர்த்துகிறார். “உத்க்ருஷ்டஜந்மமே ச்ரேஷ்டம்” என்பது என்ன? (கடந்த வரியில் உள்ள ”உள்ளதன் காரணமாக” என்று தொடங்கிப் படிக்கவும்) அடிமைத்தனத்துடன் கூடியதாக, உண்மையாகிய உயர்பிறவி என்றுள்ள தாழ்ந்த குலத்தில் பிறத்தல் என்பது இப்படிப்பட்ட மேன்மை அற்றதான உயர்ந்த குலத்தில் பிறப்பதைக் காட்டிலும் சிறந்தது.