Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 215)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
நைச்யம் ஜன்மஸித்தம்.
ப்ரம்சஸம்பாவநையன்றோ இல்லாதது, நைச்ய பாவநை யில்லையோ வென்ன வருளிச்செய்கிறார் (நைச்யம் ஜந்ம ஸித்தம்) என்று தொடங்கி.
– ”நமக்குத் தகுதி அல்லாத உபாயங்களைக் கைக் கொள்கிறோம்” என்ற அச்சம் அல்லவோ தாழ்ந்த பிறவிகளுக்கு இல்லாத ஒன்றாக உள்ளது? தாழ்வை எண்ணியபடி இருத்தல் வேண்டும் என்று எண்ணம் கூடவா அவர்களுக்கு இயற்கையில் இல்லை என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது பாகவதாநுவர்த்தநாதிகளுக் குறுப்பான தாழ்ச்சி பிறந்துடைமை யாயிருக்கையாலே பாவிக்கவேண்டாதே பள்ளமடையா யிருக்குமென்றபடி.
– பாகவதர்களுக்குக் கைங்கர்யம் செய்து, அவர்களுக்கு ஏற்றபடி நடத்தல் என்பது போன்ற செயல்களுக்குக் காரணமான தாழ்ச்சி என்பது இவர்களுக்கு (தாழ்ந்தவர்கள் என்று தவறாக மயங்கிய உயர்ந்தவர்கள்) பிறவியிலேயே ஏற்பட்ட ஒன்று; ஆகவே இவர்களின் தாழ்ச்சி என்பது நீரை மேட்டிலிருத்து பள்ளத்திற்கு பாயச்செய்வது என்னும் செயல் எளிதாக உள்ளது போன்று, இவர்களுக்கு எளிதாகவே அமைந்துவிடும்.