Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 214)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அபக்ருஷ்டமாக ப்ரமித்த உத்க்ருஷ்ட ஜந்மத்துக்கு இரண்டு தோஷமுமில்லை.

– ஏதத்ப்ரதிகோடியான ஜந்மத்தினுடைய தோஷாபாவத்தை யருளிச் செய்கிறார் (அபக்ருஷ்டமாக) என்று தொடங்கி.

– மேலே கூறப்பட்டதற்கு மாறாக உள்ளதான, “இந்தப்பிறவி தாழ்ந்தது” என்று மயங்கிய பிறவிக்கு, மேலே கூறப்பட்ட தோஷங்கள் இல்லை என்று அருளிச்செய்கிறார் (அதாவது பிறப்பாலும், ஞானத்தாலும் உண்மையாகவே உயர்ந்து காணப்படும் ஒரு பிறவியை தாழ்ந்ததே என்று எண்ணிக் கொள்பவர்களுக்கு இந்தத் தோஷம் இல்லை).

– ஆபிஜாத்யாதிகளால் வருமஹங்கார யோக்யதை யின்றிக்கே சேஷத்வாநு கூலமாயிருக்கையாலே, உத்க்ருஷ்டமாயிருக்கிறவித்தை அபக்ருஷ்டமாக நினைத்ததும் அதஸ்மிம்ஸ்தத் புத்தியென்னுமிடந் தோற்ற (அபக்ருஷ்டமாக ப்ரமித்த உத்க்ருஷ்ட ஜந்மம்) என்கிறார். (இரண்டு தோஷமுமில்லை) என்றது ப்ரம்ச ஸம்பாவநையாலே வரும் பயாஜநகத்வமும் ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் பாவிக்க வேண்டுகையுமாகிற தோஷ த்வயமுமில்லை யென்றபடி.

உயர்ந்த பிறவி, ஆசாரம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய அஹங்காரம் உண்டாவதற்கு வழி இல்லாமல், ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு ஏற்றதான அடிமைத்தனத்துடன் இருந்தால், அந்தப் பிறவி உண்மையிலேயே உயர்ந்த ஒன்றே ஆகும். ஆனால் அப்படிப்பட்ட பிறவியைத் தாழ்ந்த ஒன்றாக எண்ணுதல் என்பதும் தவறான ஞானம் என்பதை உணர்ந்தும்விதமாக “அபக்ருஷ்டமாக ப்ரமித்த உத்க்ருஷ்ட ஜந்மம்” என்றார். ” இரண்டு தோஷமுமில்லை” என்பது என்ன? கடந்த சூர்ணையில் கூறப்பட்ட நழுவுதல் என்பதற்குக் காரணமாக உள்ள பயத்தை ஏற்படுத்துவதும், ஸ்வரூபத்துடன் கூடியதான தாழ்வை எப்போதும் எண்ணியபடி இருக்கவேண்டும் என்பதான இரண்டு தோஷங்களும் இல்லை என்று பொருள் (அதாவது தனக்குத் தகுதி இல்லாத உபாயங்களைக் கைக்கொள்வதால் தான் நழுவிவிடுவோமோ என்னும் அச்சம் மற்றும் தன்னுடைய தாழ்வை விண்ணப்பிக்க வேண்டும்படியான நிலை ஆகிய இரண்டும் இவர்களுக்கு இல்லை).