Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 213)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அதுக்கு ஸ்வரூபப்ராப்தமான நைச்யம் பாவிக்க வேணும்.
இன்னமு மிதுக்கொரு தோஷமருளிச்செய்கிறார் (அதுக்கு) என்று தொடங்கி.
– மேலும் ஒரு தோஷத்தை அருளிச்செய்கிறார்.
(அதுக்கு) என்று – கீழ்ச்சொன்ன ஜந்மத்தைப் பராமர்சிக்கிறது. (ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் பாவிக்கவேணும்) என்றது – பாகவதாநுவர்த்தநாதிகளில் வந்தால் சேஷத்வமாகிற ஸ்வரூபத்துக்குத் தகுதியான தாழ்ச்சி, பிறர் செய்கிறது கண்டநுகரித்துக் கற்கவேணுமென்றபடி.
“அதுக்கு” என்ற பதம் கடந்த சூர்ணைகளில் கூறப்பட்ட பிறவியை உணர்த்துகிறது. “ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் பாவிக்கவேணும்” என்பது என்ன? பாகவதர்களுக்கு ஏற்ற கைங்கர்யம் செய்யவேண்டும் என்னும்போது, தனது அடிமைத்தனத்திற்கே உரிய ஸ்வரூபத்திற்கு ஏற்றதான தாழ்மை உண்டாகவேண்டும்; அவற்றை மற்ற பாகவதர்கள் செய்வதைப் பார்த்து, கற்றுக் கொள்ளவேண்டும் (அதாவது இத்தகைய தாழ்வு என்ற சிந்தனை இயற்கையாகவே இவனுக்கு இருப்பதில்லை, மேலும் இந்தத் தாழ்வு தனக்கு உள்ளதாக ஒரு சிலர் போலியாகக் காட்டிக்கொள்ளக்கூடும். இந்தக் காரணங்களால் தோஷம் உள்ளது என்றுகருத்து).