Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 209)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ப்ரயோஜகம் பகவத் ஸம்பந்தமும் தத்ஸம்பந்தமும்.

ஆனால் பேறிழவுகளுக்கு ப்ரயோஜகமாவதேதென்ன வருளிச்செய்கிறார் (ப்ரயோஜகம்) என்று தொடங்கி.

மேலே உள்ளபடி உரைத்தால், அவனை அடைதல் மற்றும் அடைய இயலாமல் இழத்தல் ஆகியவற்றுக்குக் காரணமாக எதுதான் உள்ளது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, பகவல்லாபமாகிற பேற்றுக்கு ப்ரயோஜகம், நாம் பகவ தநந்யார்ஹ சேஷபூதரென்றிருக்கையாகிற பகவத் ஸம்பந்தம்; தத்லாபமாகிற விழவுக்கு ப்ரயோஜகம், ததநந்யார்ஹ சேஷத்வ ஜ்ஞாநாபாவமாகிற தத்ஸம்பந்தாபாவ மென்றபடி.

ஸர்வேச்வரனை அடைதல் என்ற பேற்றுக்குக் காரணம் எதுவென்றால் “நாம் ஸர்வேச்வரனுக்கு மட்டுமே அடிமையாக உள்ளவர்கள்” என்று இருக்கின்ற பகவத் ஸம்பந்தம் ஆகும். அவனை அடைய இயலாமல் உள்ள நிலைக்குக் காரணம் எதுவென்றால், “நாம் அவனுக்கு மட்டுமே அடிமைப்பட்டவர்கள் என்கிற ஞானம் இல்லாமல் இருத்தல்” என்பதான பகவத் ஸம்பந்தம் இன்மை என்பதே ஆகும்.