Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 201)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இது தனக்கு அதிகாரி நியமமில்லை.

– இதுதான் ஜந்மாதிகளாலும் ஜ்ஞாநாதிகளாலும் அபக்ருஷ்டரானவர்கள் உத்க்ருஷ்ட விஷயத்தில் பண்ணுமளவிலேயோ, அவற்றா லுத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்ட விஷயத்தில் பண்ணுமளவிலு மொக்குமோவென்ன வருளிச்செய்கிறார் (இது தனக்கு) இத்யாதியாலே.

– இந்த பாகவத அபசாரம் எப்படிப்பட்டது? தங்களது பிறப்பு, ஞானம் போன்றவற்றால் கீழானவர்கள், இவற்றின் முலம் உயர்ந்தவர்கள் விஷயத்தில் செய்கின்ற அபசாரமா? அல்லது பிறவி போன்றவற்றால் உயர்ந்தவர்கள், இவற்றின் மூலம் தாழ்ந்த அடியார்களுக்குச் செய்யும் அபசாரமா? இதற்கான விடையை அருளிச்செய்கிறார்.

அதாவது, பாகவதாபசாரத்துக்கு அப்படி யிருப்பதோ ரதிகாரி நியதியில்லை யென்கை.

– பாகவத அபசாரத்திற்கு இது போன்ற பாகுபாடு ஏதும் இல்லை.