Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 200)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஆரூடபதிதனாகையாலே.
– அதுக்கடி, பாகவதத்வமாகிற உயர்ந்த நிலத்திலே யேறி “பத்மகோடி சதேநாபி நக்ஷமாமி” என்னும்படி அதிக்ரூரமான பகவந் நிக்ரஹத்துக்கு ஹேதுவான பாகவதாபசாரத்தாலே பாறவடியுண்டு அத:பதித்தவனாகையாலே யென்கை.
(ஆரூடபதிதன் என்பவன் மேலே ஏறி, பின்னர், கீழே விழுந்தவன் ஆவான்) பகவானுக்கு அடிமை என்பதான உயர்ந்த தகுதியைப் பெற்று, வராஹ புராணம் – பத்மகோடி சதேநாபி நக்ஷமாமி – எனது அடியார்களை நிந்தித்தவர்களை நான் நூறு கோடி தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்தாலும் பொறுக்கமாட்டேன் – என்று கூறுவதற்கு ஏற்ப மிகவும் கொடூரமான பகவத் தண்டனையை அடைகிறான். இதன் காரணம் பாகவத அபசாரம் ஆகும். ஆக உயர்ந்த நிலையில் இருந்து கீழே விழுகின்ற இவனுக்குச் சரியான அடியே ஏற்படும்.