Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 199)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஜாதிசண்டாளனுக்குக் காலாந்தரத்திலே பாகவதனாகைக்கு யோக்யத்தை யுண்டு; அதுவுமில்லையிவனுக்கு.

சண்டாளனோபாதியாகிலும் இவனுமொரு காலத்திலே யீடேறு மென்று நினைக்கைக் கவகாசமில்லாதபடி, ஜாதி சண்டாளனில் கர்மசண்டாளனுக்குள்ள தண்மையை யருளிச்செய்கிறார் (ஜாதி சண்டாளனுக்கு) என்று தொடங்கி.

இவன் பிறவிச்சண்டாளன் போன்று ஆனபோதிலும், பிறவிச்சண்டாளன் ஒரு காலகட்டத்தில் கரை ஏறி விடுகிறான் என்று கூறுவது போன்று, இவனைக் கூற இயலாதபடி ஆகிறான். பிறவியிலேயே சண்டாளனாக உள்ளதைக் காட்டிலும் இந்தக் கர்மசண்டாளனுக்கு உள்ள தாழ்வை உரைக்கிறார்.

அதாவது ஜாத்யா சண்டாளனானவனுக்கு தஜ்ஜந்மத்திலேயாதல் ஜந்மாந்தரத்திலோயாதல் பகவத் கடாக்ஷ முள்ளதொரு காலவிசேஷத்திலே நாம ரூபங்களை யுடையனாய் பகவத் ஸம்பந்த நிரூபிதனாகைக்கு யோக்யதை யுண்டு, அந்த யோக்யதையுமில்லை பாகவதாபசார ரூப கர்மத்தாலே சண்டாளனான இப்பாபிஷ்ட்டனுக்கு.

பிறப்பிலேயே சண்டாளனாகப் பிறக்க நேர்ந்தாலும், அந்தப் பிறவியிலோ அல்லது ஏதோ ஒரு பிறவியிலோ கிட்டுகின்ற பகவத் கடாக்ஷம் காரணமாக, தகுதியான நாமரூபங்கள் கொண்டவனாக, பகவானுடன் இவன் தொடர்பு உடையவன் என்று எண்ணும்படியாக அறியக்கூடிய தகுதிகள் ஏற்படக்கூடும். ஆனால் பாகவத அபசாரம் காரணமாகக் கர்மசண்டாளனாக மாறியவனுக்கு, மிகுந்த பாவங்கள் நிறைந்தவன் என்பதால், இப்படிப்பட்ட தகுதிகள் எப்போதும் ஏற்படாது.