Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 197)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அத்தை மாத்ருயோநி பரீக்ஷையோ டொக்கும் என்று சாஸ்த்ரம் சொல்லும்.

அது தன்னினுடைய க்ரௌர்யந்தா னெவ்வளவென்ன வருளிச்செய்கிறார் (அத்தை) இத்யாதியாலே.

இப்படியாக ஸர்வேச்வரனின் அர்ச்சா விக்ரஹம் பற்றி ஆராய்வது என்பதன் கொடுமை எப்படிப்பட்டது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– ”அர்ச்சாவதாரோபாதாந வைஷ்ணவோத்பத்தி சிந்தநம் மாத்ருயோநி பரீக்ஷாயாஸ் துல்யமாஹுர் மநீஷிண:” என்னா நின்றதிறே. இப்படி உபயத்தையும் மாத்ருயோநி பரீக்ஷா ஸமமாக சாஸ்த்ரஞ் சொல்லிற்றேயாகிலும், அது அர்ச்சாவதாரத்தி லுபாதாந ஸம்ருத்திக்கு நிதர்சநமாமித்தனை; வைஷ்ணவோத்பத்தி சிந்தனமதிலும் க்ரூரமென்றிவர்க்குக் கருத்து. (மாத்ருயோநி பரீக்ஷையாவது) - அந்ய ஸ்த்ரீயோநி வைலக்ஷண்யாவைலக்ஷண்ய நிரூபண வாஸநையாலே யித்தையுமப்படி நிரூபிக்கை. (அத்தோடொக்கும்) என்றது - இப்படி நிரூபித்தால் அதுக்கு எத்தனை பாபமுண்டு, அர்ச்சாவதார விக்ரஹோபாதாந சிந்தநத்திலு மத்தனைபாப முண்டென்றபடி.

அர்ச்சாவதாரோபாதாந வைஷ்ணவோத்பத்தி சிந்தநம் மாத்ருயோநி பரீக்ஷாயாஸ் துல்யமாஹுர் மநீஷிண: - அர்ச்சை விக்ரஹங்கள் எந்த உலோகத்தால் செய்யப்பட்டவை என்று ஆராய்தல், பாகவதன் ஒருவனின் குலம் பற்றி ஆராய்தல், தாயின் யோநியை ஆராய்தல் ஆகிய மூன்றும் ஒரே செயல் போன்றது – என்றது காண்க. இப்படியாக திவ்யமங்கள விக்ரஹம் பற்றி ஆராய்தல், பாகவதன் ஒருவனின் குலம் பற்றி ஆராய்தல் ஆகிய இரண்டும் தாயின் யோனி ஆராய்ச்சி என்பதற்கு ஒப்பாகக் கூறப்பட்ட போதிலும், அந்தச் செய்கை என்பது அர்ச்சா விக்ரஹத்தை ஆராய்வதற்கு மட்டுமே ஒப்பாகும். ஏன் என்றால், பாகவதர்களின் பிறவி பற்றி ஆராய்வது இந்தச் செய்கைகளைக் காட்டிலும் கொடுமையானது என்று அறிஞர்கள் கூறுவர். “மாத்ரு யோநி பரீக்ஷை” என்றால் என்ன? ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பின் அழகினையும், அழகற்ற தன்மையையும் பற்றி ஆராய்ந்த அதே எண்ணத்தின் காரணமாக, தனது தாயின் யோனியையும் அதே போன்று எண்ணுதல் என்பதாகும். “அத்தோடொக்கும்” இந்தச் செய்கைக்கு எத்தனை பாவம் உண்டோ, அதே அளவு பாவம் அர்ச்சாவதார விக்ரஹத்தின் மூலப்பொருள் என்ன என்று ஆராய்வதிலும் உண்டு.