Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 195)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அதிலே யொன்று அவர்கள் பக்கல் ஜந்மநிருபணம்.
அவற்றில் வைத்துக்கொண்டு, ஜந்மநிரூபணத்தினுடைய க்ரெளர்யத்தை யருளிச் செய்வதாக, அத்தை யுபாதாநம் பண்ணுகிறார் (அதிலே யொன்று அவர்கள் பக்கல் ஜந்மநிரூபணம்) என்று.
இப்படியாக உள்ள பலவிதமான பாகவத அபசாரங்களில் ஒன்றான அவர்களது பிறப்பு பற்றி ஆராய்தல் என்பதால் ஏற்படுகின்ற கொடுமை பற்றி விளக்கவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு, அதனை இந்தச் சூர்ணையில் அருளிச் செய்கிறார்.
(ஜந்மநிரூபணமாவது) நிக்ருஷ்ட குலங்களிலே யவதீர்ணரான பாகவதர்களை, பகவதீயத்வ ப்ரயுக்தமான மாஹாத்ம்யத்தைப் பாராதே நிகர்ஷ புத்த்யா தத்தஜ்ஜந்மங்களை நிரூபிக்கை.
ஜந்மநிரூபணம் என்றால் என்ன? தாழ்ந்த குலங்களில் பிறந்த பாகவதர்களுக்கு ஸர்வேச்வரனுடன் கொண்ட தொடர்பு காரணமாக உண்டாகின்ற பெருமை பற்றி சிலர் அறிவதில்லை; இதனால் அவர்களைத் தாழ்ந்தவர்கள் என்றே எண்ணியபடி, அவர்களது பிறப்பு பற்றி ஆராய்தல் என்று பொருள்.