Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 194)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
பாகவத்ஜாபசாரத்தான அநேகவிதம்
இப்படிப்பட்ட பாகவதாபசாரத்தினுடைய வைவித்யத்தை யருளிச் செய்கிறார் (பாகவதாபசாரந்தான்) என்று தொடங்கி.
– இப்படியாக உள்ள பாகவத அபசாரம் என்பது பலவிதமாக உள்ளது என்று அருளிச்செய்கிறார்.
(அநேக விதம்) என்றது, ஜந்மநிரூபணம், ஜ்ஞாந நிரூபணம், வ்ருத்த நிரூபணம், ஆகார நிரூபணம், பந்து நிரூபணம், வாஸ நிரூபணம் இத்யாதிகளாலே பலபடிப்பட்டிருக்குமென்றபடி.
பாகவதர்களின் பிறப்பு குறித்து ஆராய்தல், அவர்களின் ஞானம் குறித்து ஆராய்தல், அவர்களது ஒழுக்கம் குறித்து எண்ணுதல், அவர்களின் உருவம் குறித்து எண்ணுதல், அவர்களது உறவினர்கள் குறித்து ஆராய்தல், அவர்களின் இருப்பிடம் குறித்து எண்ணுதல் போன்று பாகவத அபசாரம் என்பது பலவிதமாக உள்ளது.