Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 193)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அவமாநக்ரியா
இந்த பாகவதாபசாரத்தினுடைய க்ரௌர்யத்தில் பகவ துக்தியை தர்சிப்பிக்கிறார் (அவமாநக்ரியா) என்று.
– பாகவத அபசாரத்தின் கொடுமையைப் பற்றி ஸர்வேச்வரனின் சொற்கள் மூலமாகவே உரைக்கிறார்.
– “யா ப்ரீதிர் மயி ஸம்வ்ருத்தா மத்பக்தேஷு ஸதாஸ்துதே, அவமாந க்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத்” என்றானிறே.
மஹாபாரதம் – யா ப்ரீதிர் மயி ஸம்வ்ருத்தா மத்பக்தேஷு ஸதாஸ்துதே, அவமாந க்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத் - என் மீது எத்தகைய ப்ரேமை உனக்கு ஏற்பட்டதோ அதே ப்ரேமை எனது அடியார்கள் மீதும் உனக்கு உண்டாகக் கடவது. அந்த பக்தர்களிடம் செய்யப்படும் அபசாரம் என்பது அனைத்து உலகங்களையும் அழித்துவிடும் - என்று ஸர்வேச்வரனே கூறியது காண்க.