Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 186)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
“காட்டிப்படுப்பாயோ” என்னக்கடவதிறே.
இவ்வர்த்தத்தை ஆப்தவசநத்தாலே யிசைவிக்கிறார் (காட்டி) என்று தொடங்கி.
கடந்த சூர்ணையில் கூறப்பட்டதை நம்புவதற்கு ஏற்ப உள்ள உயர்ந்தவர்களின் சொற்கள் மூலம் உணர்த்துகிறார்.
அதாவது அல்ப ரஸங்களாய் அநேகவிதங்களாயிருந்துள்ள துர்விஷயங்களைக் காட்டி, அவற்றோடு பொருந்தாதபடியாய் அவற்றுக்குப் பாங்கான நிலத்திலேயிருக்கைக் கீடான பாபத்தைப் பண்ணின வென்னை முடிக்கப்பார்க்கிறாயோ வென்றபடி.
மிகவும் அற்பமான சுவையும், பலவிதங்களாகவும் உள்ள புலன்கள் மூலம் கிட்டக்கூடியவற்றை இன்பங்களாகக் காண்பிக்கிறாய்; அவற்றுடன் பொருந்தாமலும், அந்த இன்பங்களை அனுபவிக்க ஏற்றதாக உள்ள இந்த உலகில் இருப்பதற்குத் தகுதியான பல பாவங்கள் செய்த என்னை நீ முடிக்கப்பார்க்கிறாய் போலும் - என்று திருவாய்மொழியில் ஸ்வாமி நம்மாழ்வார் உரைத்ததைக் காண்பிக்கிறார்.