Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 181)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அஹங்கார மக்நிஸ்பர்சம் போலே.
இவ்வஹங்காராதிகளின் கொடுமையை விஸ்தரேணோபபாதிப்பதாகத் திருவுள்ளம் பற்றி ப்ரதமம் அஹங்காரத்தின் கொடுமையை அருளிச்செய்கிறார் (அஹங்காரம்) என்று தொடங்கி.
அஹங்காரம் உள்ளிட்டவற்றின் கொடுமையை விரிவாக எடுத்துரைப்பதற்குத் திருவுள்ளம் கொண்டவராக, முதலில் அஹங்காரத்தின் கொடுமையை அருளிச்செய்கிறார்.
(அக்நி ஸ்பர்சம் போலே) என்றது - அக்நி ஸ்பர்சமானது அந்வயித்த விடமெங்கும் சுட்டுருவழிக்குமாப்போலே, இதுவும் ஆச்ரயாசியாய் ஸ்வரூபத்தை நேராக வுருவழித்துவிடு மென்கை.
– ”அக்நி ஸ்பர்சம் போலே” என்றால் நெருப்பின் சேர்க்கை என்பது அது பரவிய இடம் எங்கும் எரித்து, ஒன்றும் இல்லாமல் அழிப்பது போன்று, இத்தகைய அஹங்காரம் என்பது அதனை அடைந்தவர்களை அழிப்பதாகவும் ஆத்மஸ்வரூபத்தை அழிப்பதாகவும் உள்ளது என்று கருத்து.